சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்; அலையில் அடித்துச் செல்லப்பட்ட 8 மாணவர்களுக்குச் நேர்ந்த சோகம்

Oct 02, 2026 - 12:00
0
சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்; அலையில் அடித்துச் செல்லப்பட்ட 8 மாணவர்களுக்குச் நேர்ந்த சோகம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த வின்னர்ஸ் அகாடமி என்ற கோச்சிங் மையத்தில் படிக்கும் மாணவர்கள் அடங்கிய 48 பேர் கொண்ட குழு மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான திவேகர் கடற்கரைக்குச் சென்றனர்.

25 மாணவன்கள், 17 மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் அடங்கிய 48 பேர் கொண்ட குழுவினர் தனியாக பஸ் ஏற்பாடு செய்து நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில் கடற்கரைக்குச் சுற்றுலா சென்றனர். கடற்கரையில் அனைவரும் விளையாடிக்கொண்டிருந்தபோது அவர்களில் எட்டு மாணவர்கள் கடலுக்குள் சென்றபோது, ​​நீரின் ஆழம் மற்றும் நீரோட்டத்தைச் சரியாகக் கணிக்காததால் அலைகளால் அடித்து செல்லப்பட்டனர்.

இது குறித்து கேள்விப்பட்டதும், உடனடியாகச் செயல்பட்ட திவேகரைச் சேர்ந்த பாவ் மாருதி சலுங்கே மகாகாளி வாட்டர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பாவ் சலுங்கே மற்றும் அவரது குழுவினர், உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கினர்.

அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கடலில் மூழ்கி உயிரிழந்த எட்டு பேரின் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உள்ளூர் கிராம மக்களின் உதவியுடன் உடல்களைக் கைப்பற்றிய போலீஸர், அவற்றை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவர்கள் தன்மய் தத்தாத்ரே வாஹிலே, சுமித் பாரத் அஹிரே, பிரணவ் ராம்தாஸ் பன்சோடே, கைவல்யா சதீஷ் வசங்கர், ராஜ்வீர் யுவராஜ் வாஹிலே, யாஷ் கிரண் வான்கடே, சோஹம் துக்காராம் பண்ட்வால்கர் மற்றும் கௌஸ்துப் சந்தீப் டவுண்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் புனேயில் உள்ள இறந்த மாணவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் துணை முதல்வர் சுனேத்ரா பவார் ராய்கட் மாவட்ட ஆட்சித்தலைவரைத் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பிக்னிக் சென்ற மாணவர்கள் அனைவரும் 11 மற்றும் 12வது வகுப்பு படிப்பவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User