காரில் Thrusters தொழில்நுட்பம்; பறக்குமா? எப்போ பயன்பாட்டுக்கு வரும் டெஸ்லாவின் புதிய ரோட்ஸ்டர்?

Oct 16, 2026 - 13:00
0
காரில் Thrusters   தொழில்நுட்பம்; பறக்குமா? எப்போ பயன்பாட்டுக்கு வரும் டெஸ்லாவின் புதிய ரோட்ஸ்டர்?

2028 ஆம் ஆண்டு கார் உலகின் புதிய திருப்பமாக அமையும் வகையில் எலான் மஸ்க்கின் புதிய ரோட்ஸ்டர் கார் அறிமுகமாக உள்ளது.

காரில் பயணம் செய்வது என்பது பலருக்கும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது . ஆனால், அதே கார் தரையிலிருந்து மேலே சென்று பறந்தால் எப்படி இருக்கும்? அறிவியல் புனைக்கதை திரைப்படங்களில் மட்டுமே பார்த்த இத்தகைய காட்சியினை நிஜமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்.

அக்டோபர் 15, 2026 அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வில், டெஸ்லா தனது புதிய தலைமுறை ரோட்ஸ்டர் (Roadster) மின்சார ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்தியது டெஸ்லா. இதில் எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட த்ரஸ்டர்கள் (Thrusters) இடம்பெற்றுள்ளன.

காரை மேலெழும்பச் செய்யும் தொழில்நுட்பம்!

இந்த ரோட்ஸ்டர் காரின் சிறப்பம்சம் அதன் வேகம் மட்டுமல்ல; வித்தியாசமான அசைவுகளை நிகழ்த்தும் திறனும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில், சிறப்பு அமைப்பின் உதவியுடன் கார் தலைகீழான பாதையில் நகர்வது போன்ற சாகசத்தையும், காற்றில் திரும்பி மீண்டும் தரையிறங்குவது போன்ற காட்சிகளையும் நிகழ்த்திக் காட்டியது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

இதற்காகப் பயன்படுத்தப்படும் த்ரஸ்டர்கள், அழுத்தப்பட்ட வாயுவை வெளியேற்றி எதிர்த்திசையில் உந்துவிசையை உருவாக்கும் முறையில் செயல்படுகின்றன. இதன் மூலம் வாகனத்தைச் சிறிது நேரம் மேலெழும்பச் செய்யவும், அதன் அசைவைக் கட்டுப்படுத்தவும் முடியும் எனக் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் வழக்கமான காரைப் போலச் சாலையில் ஓட்டுவதற்கும், விமானத்தைப் போல நீண்ட நேரம் பறப்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

வேகத்தில் புதிய சாதனையா?

இந்தக் காரை மணிக்கு சுமார் 96 கிலோமீட்டர் வேகத்தை ஒரு விநாடிக்குள் எட்டும் வகையில் உருவாக்கியுள்ளதாக டெஸ்லா தெரிவித்துள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 370 கிலோமீட்டரைத் தாண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவை நிறுவனத்தின் அறிவிப்புகள் என்பதால், நடைமுறைச் சோதனைகளில் அவற்றின் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

புதிய ரோட்ஸ்டர் காரின் உற்பத்தி 2028-ஆம் ஆண்டு தொடங்கும் என டெஸ்லா திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்தக் காரின் பறக்கும் அம்சங்களைப் பொதுச் சாலைகளில் பயன்படுத்துவதற்கான சட்ட அனுமதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. எனவே, இது உடனடியாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய கார் என்று கூறிவிட முடியாது.

கார்களையும் விண்வெளித் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் இந்த முயற்சி, எதிர்காலப் போக்குவரத்து எப்படி மாறக்கூடும் என்ற கேள்வியை நம்மில் பலரிடம் எழுப்புகிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் அன்றாடப் பயணத்துக்கு ஏற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் மாறுமா என்பதை வரும் காலம்தான் தீர்மானிக்கும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User