Retirement: கோடி டு நடுத்தெரு... ஏழையான பிரபலங்கள் கற்றுத் தரும் ரிட்டைர்மென்ட் பாடம் என்ன?

Oct 16, 2026 - 21:00
0
Retirement: கோடி டு நடுத்தெரு... ஏழையான பிரபலங்கள் கற்றுத் தரும் ரிட்டைர்மென்ட் பாடம் என்ன?

கோடிகளில் சம்பளம், லட்சக்கணக்கான ரசிகர்கள்... உச்சத்தில் இருந்த பிரபலங்களே கடைசியில் நடுத்தெருவுக்கு வந்த கதைகள் உங்களுக்குத் தெரியுமா? இந்த 'செலிப்ரிட்டி டவுன்ஃபால்' கதைகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?

M.K.தியாகராஜ பாகவதர்

தியாகராஜ பாகவதர்
தியாகராஜ பாகவதர்

1944-ல் 'ஹரிதாஸ்' படம் சென்னை பிராட்வே தியேட்டரில் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தபோது, தங்கத் தட்டில் சாப்பிட்டவர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான M.K.தியாகராஜ பாகவதர்! அன்றைய காலத்திலேயே லட்சங்களில் சம்பளம் வாங்கியவர், 'லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில்' சிக்கினார். 3 ஆண்டுகள் சிறைவாசம், லண்டன் கோர்ட் வரை நீண்ட சட்டப்போராட்டம் எனத் தன் அத்தனை கோடி சொத்துக்களையும் இழந்து, இறுதியில் ஏழ்மையில் மறைந்தார்.

சந்திரபாபு

சந்திரபாபு
சந்திரபாபு

"போடா ராஜா பொடி நடையாக..." என யோடேலிங் ஸ்டைலில் பாடி, 1950-களில் ஹீரோக்களுக்கு இணையான ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. கார்களை நேரடியாக முதல் மாடிக்கு ஓட்டிச் செல்லும் அளவுக்குப் பிரமாண்ட பங்களா கட்டியவர், ‘மாடி வீட்டு ஏழை’ என்ற சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கி, எம்.ஜி.ஆருடனான மோதலால் மொத்த பணத்தையும் இழந்தார். வீட்டைப் பறிமுதல் செய்த கோர்ட், அவரைத் தெருவில் நிறுத்தியது. 

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

80 & 90-களில் பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் மன்னனான அமிதாப் பச்சன், 'ABCL' என்ற கம்பெனியைத் தொடங்கி 90 கோடி கடன் வலையில் சிக்கினார். கடன் கொடுத்தவர்கள் வாசலில் நிற்க, தன் சொந்த பங்களாவான 'ப்ரதீக்ஷா'வையே அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் 'கவுன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியும், இன்றுவரை பல்வேறு விளம்பரங்களில் நடித்தும், தான் விட்ட சொத்துக்களை மீட்டு எடுத்துள்ளார்.

மைக் டைசன்

மைக் டைசன்
மைக் டைசன்

$300 மில்லியனுக்கும் மேல் சம்பாதித்த மாபெரும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், செல்லப் பிராணியாக வெள்ளை புலி வளர்ப்பது, மாதாமாதம் 100,000 டாலரை நகை மற்றும் ஆடைகளுக்கு மட்டுமே செலவழிப்பது என்று தவறான நிதிப் பழக்கங்களால் 2003-ல் முழுமையாகக் கடனாளியாகிப் போனார்.

நிக்கோலஸ் கேஜ்

நிக்கோலஸ் கேஜ்
நிக்கோலஸ் கேஜ்

90ஸ் கீட்ஸின் ஃபேவரட் படமான 'கோஸ்ட் ரைடர்' பார்த்திருப்பீர்கள். அதன் ஹீரோவான ஹாலிவுட் ஸ்டார் நிக்கோலஸ் கேஜ், $150 மில்லியனை வைத்துக்கொண்டு, $2,76,000 டாலருக்கு டைனோசர் மண்டை ஓடு, பேய் பங்களாக்கள் எல்லாம் வாங்கி, ஒரு கட்டத்தில் வரி கட்டக்கூடக் காசில்லாமல் நின்றார்.

கோடிகளில் புரண்ட இந்த லெஜண்டுகள் வீழ்ந்ததற்குக் காரணம்... தவறான முதலீடுகளும், கட்டற்ற செலவுகளுமே!

50 வயதைக் கடந்த சராசரி ஆட்கள் இதிலிருந்து கற்க வேண்டிய ‘ரிட்டயர்மென்ட் செக்-லிஸ்ட்’:

பிரைவேட் பிசினஸ் ரிஸ்க்... நோ!: சந்திரபாபு, அமிதாப் போலத் தெரியாத தொழிலில் இறங்கி, ரிட்டயர்மென்ட் ஃபண்டை அழிக்காதீர்கள்.

சட்டச் செலவு & ஹெல்த் இன்சூரன்ஸ்: பாகவதர் போல எதிர்பாராத வழக்குகளோ, மருத்துவ அவசரமோ வந்தால் ஆயுள் சேமிப்பைக் காக்கத் தனி லீகல் / ஹெல்த் இன்சூரன்ஸ் அவசியம்.

வாழும் வீட்டைத் தொடாதீர்கள்: தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட உறைவிடத்தை அடமானம் வைப்பது மிகப்பெரிய ஆபத்து.

மாதாந்திர பாசிவ் இன்கம்: வேலை நின்றாலும் மியூச்சுவல் ஃபண்ட் SWP அல்லது பாண்டுகள் மூலம் மாதச் செலவுக்கு பணம் வர வேண்டும்.

லைஃப்ஸ்டைல் கட்டுப்பாடு: டைசன், கேஜ் போலப் போலி ஆடம்பரம் காட்டினால் எந்தக் கோடியும் பத்தாது.

ஆயிரம் கோடிகள் சம்பாதிப்பதை விட, 50-க்கு மேல் நிம்மதியான நிதிச் சுதந்திரத்தைப் பேணுவதே நிஜமான கெத்து!

Labham workshop for the 50+ aged OCtober 18 2026 | ரிட்டைர்மென்ட்

50+ வயதில் நீங்க நிம்மதியா வாழணும்னு ஆசையா?

வரும் ஞாயிறு, அக்டோபர் 18, 2026 அன்று நடைபெறும் 50+ வயத்தினருக்கான சிறப்பு ரிட்டைர்மென்ட் ஓர்க் ஷாப்பில் கலந்துகொள்ள வேண்டுமா?

  • 50+ வயதினருக்கான நிதி வழிகாட்டல்

  • ஃபிக்ஸட் டெப்பாசிட்/மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் இருந்து மாதம் ₹20000 - ₹40000 வரை மாத வருமானம் பெறும் வழிகள்.

  • ரிட்டைர்மெண்டுக்குப் பிறகு செய்யக்கூடாத தவறுகள்.

இவற்றையெல்லாம் கற்றுப் பயன்பெறுங்கள். அக்டோபர் 17, சனி இரவு 9 மணிக்கு முன்பதிவு முடிகிறது. கட்டணம் ஏதுமில்லை, இன்றே முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-oct18-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_oct18_2026

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User