'இப்படித்தான் 2 கப் அடிச்சோம்!' - வெற்றி ரகசியத்தை விளக்கும் தினேஷ் கார்த்திக்

Jun 01, 2026 - 11:32
0
'இப்படித்தான் 2 கப் அடிச்சோம்!' - வெற்றி ரகசியத்தை விளக்கும் தினேஷ் கார்த்திக்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி

Dinesh Karthik
Dinesh Karthik

அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், 'எங்கள் அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருந்தார்கள். பெரும் சகாப்தத்தை கொண்டிருக்கும் வீரரும் இருந்தார். இந்த அணியில் ஒரு பங்களிப்பாளனாக இருந்ததில் மகிழ்ச்சி.

எங்கள் அணி ஒரு ஆல்ரவுண்ட் அணி. மேலும், எங்கள் வீரர்கள் சீசன் முழுவதும் சீரான ஆட்டத்தை ஆடினார்கள். விராட் கோலியின் விக்கெட்டை குஜராத் எடுத்திருந்தால் போட்டியை தங்கள் பக்கமாக மாற்ற முடியும் என குஜராத்துக்கு தெரியும். ஆனால், கோலி களத்தில் நின்று திடகாத்திரமாக சேஸிங்கை முடித்துக் கொடுத்தார்.

Dinesh Karthik
Dinesh Karthik

இது ஒரு நீண்ட சீசன். வீரர்களுக்கு திடீர் திடீரென காயம் அடையும் போது பேக்கப் வீரர்கள் கையில் இருக்க வேண்டும். சால்ட் இல்லாத போது பெத்தேலை பயன்படுத்தினோம். பெத்தேல் இல்லாத வெங்கடேஷை பயன்படுத்தினோம். எங்களின் திறன் வாய்ந்த போதுமான வீரர்கள் இருந்தார்கள்.

விராட் கோலி இந்த சீசனில் 600 ரன்களை அடித்திருக்கிறார். பயிற்சியின் போது விராட் கோலி சில விஷயங்களை முயற்சித்து பார்ப்பார். அந்த விஷயத்தை களத்தில் செயல்படுத்துகையில், பார்த்தாயா நான் பயிற்சியில் செய்ததை இங்கேயும் செய்துவிட்டேன் என தம்ப்ஸ் அப் காட்டுவார்.

வெளியூர்களில் ஆடும் போட்டிகளில் எங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு ரசிகர்களின் ஆதரவு பல அணிகளுக்கு கிடைப்பதில்லை. அது விராட் கோலியின் மீதான அன்பு மற்றும் நாங்கள் கிரிக்கெட் ஆடும் விதத்துக்கான மரியாதை என்று எடுத்துக் கொள்ளலாம்.

ரஜத் பட்டிதார் ஒரு அமைதியான வீரர். பதட்டப்படாத கேப்டனாக சாதித்துவிட்டார். ரஜத் தன்னை ஒரு ஸ்டாராக முன்னிறுத்தவே விரும்புகிறார், சூப்பர் ஸ்டாராக அல்ல. அதனால்தான் சில சமயங்களில் அவரால் பின்னால் இருந்து கொண்டு மற்ற வீரர்களை முன்னிலைப்படுத்த முடிகிறது' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User