திருப்பரங்குன்றம்: "இவை தீபத் திருவிழா விவகாரத்தையும் தாண்டியவை" - தவெக அரசைச் சாடும் தேஜஸ்வி சூர்யா
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
தேஜஸ்வி சூர்யா தனது பதிவில், “கார்த்திகை தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தவெக அரசு வேண்டுமென்றே அவமதித்திருப்பது மூன்று முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.
1. இந்து பக்தர்கள் சட்டப்பூர்வமான வழியில் நீதிமன்றத்தை நாடித் தீர்வு காண முயலும்போது, அந்தத் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக,
அரசே அரசியலமைப்பிற்கு எதிரான வழியில் நீதிமன்ற உத்தரவை மீறினால், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து நீதிமன்றத்தை நாடியவர்களுக்கு அந்த நம்பிக்கை தொடர்ந்து இருக்குமா?
2. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே நீதிமன்ற உத்தரவுகளைத் தங்களுக்கு ஏற்றாற்போல் தேர்வு செய்து பின்பற்றி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கூட வேண்டுமென்றே மீறத் தொடங்கினால், சட்டத்தின் ஆட்சிக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் என்னதான் மரியாதை மிஞ்சும்?
3. கீழமை நீதிமன்றங்களில் ஒப்பந்தங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களால், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை ஏற்கனவே சவாலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், அரசுகளே உச்ச நீதிமன்ற உத்தரவுகளைக் கூட வேண்டுமென்றே அவமதிக்கத் தொடங்கினால், ஒரு உயரிய அமைப்பாக நீதித்துறையின் நம்பகத்தன்மை, அதிகாரம் மற்றும் அரசியலமைப்பு ரீதியான பங்கு ஆகியவற்றின் நிலை என்னவாகும்?

இவை வெறும் தீபத் திருவிழா விவகாரத்தையும் தாண்டிய கேள்விகள். நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் கேள்விகள் இவை.
இத்தகைய ஒரு ஆபத்தான முன்னுதாரணம் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவும், நீதித்துறையின் மாண்பைக் காக்கவும், அரசியலமைப்புச் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவும் உச்ச நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை ஒட்டுமொத்த தேசமும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)