உறவுகள் அற்ற இளைஞரின் ஏக்கம்: திரண்டு வந்து திருமணத்தை நடத்திய முன்பின் அறியா மனிதர்கள்! | Viral

Nov 02, 2026 - 10:31
0
உறவுகள் அற்ற இளைஞரின் ஏக்கம்: திரண்டு வந்து திருமணத்தை நடத்திய முன்பின் அறியா மனிதர்கள்! | Viral

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள சாடோங் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சியோ சியோ சூ (Xiao Xiao Xu). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போதே தந்தை காலமானார். தாயாரும் மறுமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதால், தன் மூத்த சகோதரனுடன் இணைந்து கடின உழைப்பால் வாழ்க்கையை நடத்தி வந்தார். தன் திருமணத்திற்காகச் சிறுகச் சிறுகப் பணத்தைச் சேமித்து வந்தபோதிலும், தன் திருமணத்தைப் பார்க்கவும் வாழ்த்தவும் உறவினர்கள் யாரும் வரமாட்டார்களே என்ற ஏக்கம் அவரை வாட்டியது.

 சியோ சியோ சூ தம்பதி
சியோ சியோ சூ தம்பதி

இந்தக் கவலையைப் பகிர்ந்துகொண்டு அவர் இணையத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ, சமூக வலைதளவாசிகளின் இதயங்களைத் தொட்டது. அவரது உண்மையான அன்பையும், கவலைகளையும் கண்டு அந்த நாட்டு மக்கள், வெறும் பார்வையாளர்களாக மட்டும் நிற்காமல் களத்தில் இறங்கினர். சமையல் கலைஞர்கள் தாங்களாகவே முன்வந்து விருந்து சமைக்க ஒப்புக் கொண்டனர். சிலர் திருமணக் காரை அலங்கரித்துக் கொண்டுவந்தனர்.

பலர் வீட்டை அலங்கரிக்கவும், விருந்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கவும், இனிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் உதவிக்கரம் நீட்டினர். அந்நியர்களாக வந்த மனிதர்கள் காட்டிய பேரன்பினால், அந்தச் சிறிய கிராமமே விழாக்கோலம் பூண்டது. மக்கள் தந்த பரிசுகளினாலும் வாழ்த்துகளினாலும், அது அந்த ஊரிலேயே நடைபெற்ற மிகச்சிறந்த 'நூற்றாண்டின் திருமணமாக' மாறியது.

இந்தத் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் தங்களின் வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர். "மனிதநேயத்தின் மிக அழகான பக்கத்தைப் பார்த்து என் கண்களில் கண்ணீர் வழிகிறது" என்றும், "சமூக வலைதளங்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ, அதற்கு இந்தச் சம்பவமே சான்று" என்றும் நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User