We're Out Of Time: புளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன் பைலட்டின் இறுதி வார்த்தை
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விபத்து நடப்பதற்கு சில விநாடிகளுக்கு முன்பு, விமானி பதற்றத்துடன் கூறிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுப்பாட்டு அறையுடனான உரையாடலின்போது, விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்த விமானி, "Holy F**k, We're Out Of Time" (நேரம் முடிந்துவிட்டது) என்று அலறியுள்ளார். அதன்பின் சில விநாடிகளிலேயே விமானம் தரையை நோக்கி செங்குத்தாகப் பாய்ந்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு காரின் டேஷ்கேம் (dash-cam) பதிவில், வழக்கமான புறநகர் குடியிருப்புச் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் வேளையில், திடீரென ஒரு ஜெட் விமானம் வானிலிருந்து செங்குத்தாகக் கீழே விழுந்து வெடித்துச் சிதறும் காட்சிகள் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . குடியிருப்புப் பகுதி என்பதால் அப்பகுதியில் பெரும் புகை மண்டலம் எழுந்ததுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட கடுமையான இயந்திரக் கோளாறே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்திலிருந்தவர்களின் நிலை மற்றும் தரைப்பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இணையத்தில் பரவி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும்,நடந்த இந்த தனியார் ஜெட் விமான விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெக்சாஸிலிருந்து பஹாமாஸ் நோக்கிச் சென்ற அந்த சிறிய ரக ஜெட் விமானத்தில் பயணித்த (விமான ஊழியர்கள் உட்பட) 9 பேரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அமெரிக்க போக்குவரத்துத் துறை மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தரைப்பகுதியில் இருந்த பொதுமக்கள் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)