முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு; 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட அனுமதித்த நீதிமன்றம்!

May 03, 2026 - 12:01
0
முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு; 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட அனுமதித்த நீதிமன்றம்!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாயா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துருவ நட்சத்திரம்'.

2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் ஓவர் பட்ஜெட், கால் ஷீட் பிரச்னை, கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீஸாகாமல் இருந்தது. நிதி தொடர்பானப் பிரச்னையால் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று வழக்கும் தொடரப்பட்டு இருந்தது

துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில்...
துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில்...

இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டை தடை செய்ய கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல்.30) ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

அதாவது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிடலாம். அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடலாம் எனவும் வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படம் தொடர்பான நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, தனி வங்கி கணக்கு துவக்க வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனமான கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வங்கி கணக்கில் செலுத்தப்படும் தொகை, விடுவிக்கப்படும் தொகையை கண்காணிக்க வழக்கறிஞர் ஒருவரை கண்காணிப்பாளராக நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், இந்த வங்கிக் கணக்கில் இருந்து, பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ஊதியமாகவோ, பங்குத்தொகையாகவோ நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் வழங்கக் கூடாது என கண்காணிப்பாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User