சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.
மணிகண்டனின் கொடூர செயல் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளன. ஏமாற்றிய பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தது மட்டுமின்றி அதை ஆயுதமாகப் பயன்படுத்தி சம்மந்தப்பட்ட பெண்களைத் தனக்கும் தன்னுடைய நண்பர்களின் இச்சைக்கும் பாலியல் ரீதியாக பயன்படுத்தியதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பாக மணிகண்டன் மீது பெண் வன்கொடுமை, ஏமாற்றுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தவிர தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருள்களை விற்பனை செய்ததாக மணிகண்டன் மீது பல்வேறு இடங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில் தான் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள மணிகண்டனுக்கும் த.வெ.க-விற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனச் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)