'அண்ணியார் ஆப்சென்ட்; சுதீஷுடன் ராஜ்ய சபா சீட் மட்டும் ஒப்பந்தம்!' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

Mar 3, 2026 - 22:31
 0
'அண்ணியார் ஆப்சென்ட்; சுதீஷுடன்  ராஜ்ய சபா சீட் மட்டும் ஒப்பந்தம்!' - அறிவாலயத்தில் என்ன நடந்தது?

திமுகவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்த தேமுதிக, இன்று இரவு 8:30 மணியளவில் திமுகவுடன் ராஜ்ய சபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

சுதீஷ்
சுதீஷ்

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் கிடைக்காததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. NDA, திமுக என இரண்டு பக்கமும் பேசி வந்த தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தது. திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

திமுகவிடம் 4 ராஜ்ய சபா சீட்கள் இருக்கிறது. ராஜ்ய சபா சீட்டுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5 ஆம் தேதியே கடைசி நாள். அதனால் தேமுதிகவுக்கு உத்தரவாதம் அளித்தபடியே இன்று இரவு 8:30 மணியளவில் முதலமைச்சர் முன்னிலையில் தேமுதிகவின் சுதீஷ் ராஜ்ய சபாவுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டார். செல்வப்பெருந்தகை மகளின் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு அங்கிருந்தபடியே அறிவாலயத்துக்கு நேரில் வந்து ஒப்பந்தத்தை முடித்திருக்கின்றனர்.

ஒப்பந்தம்
ஒப்பந்தம்

இப்போது கையெழுத்தாகியிருப்பது ராஜ்ய சபா ஒப்பந்தம் மட்டுமே. சட்டமன்ற தேர்தலுக்கான இடங்கள் பற்றிய ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியூரில் இருப்பதால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அவர் வந்தவுடன் அடுத்த சில நாட்களில் தேமுதிகவுடன் சட்டமன்றத்துக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0