பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தவெக நிர்வாகி – தட்டி தூக்கிய பொள்ளாச்சி போலீஸ்!

Aug 29, 2026 - 20:01
0
பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய தவெக நிர்வாகி – தட்டி தூக்கிய பொள்ளாச்சி போலீஸ்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்களை இயக்கபட்டு வருகிறது. இதில் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொள்ளாச்சி நகர கிளை சார்பில் ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ் தனது பிறந்த நாளை முன்னிட்டு  நேற்று முன்தினம் நள்ளிரவில் நண்பர்களுடன், பொள்ளாச்சி - கோவை சாலையில் உள்ள சிடிசி மேடு புதிய பேருந்து நிலையத்தில் கொண்டாடியுள்ளார். அப்போது ஆம்புலன்சில் நோயாளிகளை எடுத்துச் செல்லும் ஸ்ட்ரெச்சர் இருக்கையில் இரண்டு கேக்குகளை வைத்து பட்டா கத்தியால் வெட்டிய சுரேஷ், தனது நண்பர்களுக்கு கொடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் சுரேஷ் பதிவிட்டுள்ளார். பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இச்சம்பவம் குறித்து மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் சுரேஷ் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பொது இடத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை பயன்படுத்திய குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சுரேஷ், அவருடன் இருந்த திவான்சாபுதூரை சேர்ந்த வாஞ்சிநாதன் (26), மரப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (27) ஆகிய 3 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User