'தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா?' - வேதாந்தா நிறுவனத்தின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

Jul 30, 2026 - 12:01
0
'தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா?' - வேதாந்தா நிறுவனத்தின் மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி 2018-ம் ஆண்டு ஆலைக்கு எதிராக 100 நாட்கள் போராட்டம் நடத்தினர்.

அந்தப் போராட்டத்தின் 100வது நாளான மே-18ம் தேதி நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டாலும், வன்முறையாலும் 2 பெண்கள் உட்பட 13  பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடியது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை, தமிழக அரசுடன் இணைந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் சென்னை உயர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி வென்றது.

இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் ”பசுமைத் தாமிர உருக்காலை” என்ற பெயரில் மீண்டும் ஆலை தொடங்க அனுமதி கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் அரி ராகவன் மூலமாக இடைமனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் இணைந்துள்ளதாகக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வெளியிட்ட அறிக்கையில், "பசுமைத் தாமிரம் என்ற பெயரில் மீண்டும் தூத்துக்குடியில் கால்பதிக்கத் துடிக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடைசி வரை சட்டப்போராட்டம் நடத்துவோம்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

அப்பகுதியின் சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதுகாப்போம்" என்று தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினர், போலீஸாரின் தடியடியில் காயம் பட்டவர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User