''ஸ்டாலின் தோல்வி அடைந்தது கஷ்டமாக இருக்கிறது" - தேம்பி அழுத சத்யராஜ்

Jun 06, 2026 - 13:31
0
''ஸ்டாலின் தோல்வி அடைந்தது கஷ்டமாக இருக்கிறது" - தேம்பி அழுத சத்யராஜ்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'தமிழாய்வுக்கு பேரறிவுத் தலைவர், கலையாவும் நன்கறிந்த கலைஞர்' என்ற தலைப்பில் ‘புத்தெழுச்சி நாள் விழா’ பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், "கொளத்தூரியில் தலைவர் வெற்றிபெற்று இருக்க வேண்டும். அவர் தோல்வி அடைந்தது கஷ்டமாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட தலைவரை தோற்கடித்திருக்கிறார்கள்" என்று அழுத சத்யராஜ், ''மக்களுக்குப் பட்டால்தான் புத்தி வரும்'' என்றிருக்கிறார்.

சத்யராஜ்
சத்யராஜ்

தொடர்ந்து பேசிய அவர், "தேர்தலில் தோற்ற மறுநாளே பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் துணிச்சல் கலைஞருக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே இருந்தது. நீதிக்கட்சியின் கொள்கைகளை மக்களுக்காக திமுக கையில் எடுத்தது.

ஆனால், இன்றைய முதல்வர் ‘வாயில் நன்றாக வருகிறது’ என்கிறார். இதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா?

உலக அளவில் பருவநிலை மாற்றங்கள் அச்சுறுத்தும் வேளையிலும், மேகதாது அணை போன்ற அண்டை மாநிலப் பிரச்னைகள் எழும்போதும், தமிழ்நாட்டை வழிநடத்த ஆளுமைமிக்க ஒரு தலைவர் தேவை.

அத்தகைய ஆளுமைமிக்க தலைவரை தமிழ்நாடு தற்போது இழந்து தவிக்கிறது. ஸ்டாலின் அவர்கள் செய்த நற்பணிகளுக்குப் பெயரை வேண்டுமானால் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளுங்கள், ஆனால் திட்டங்களை மாற்றாதீர்கள்.

சத்யராஜ்
சத்யராஜ்

'வெயிலின் அருமை நிழலில் தெரியும்' என்பார்கள். நிழல் வேண்டுமென்றால் கூட வெயில் தேவை, அதற்குச் சூரியன் உதிக்க வேண்டும். திமுக எனும் சூரியன் நிரந்தரமானது, அது ஒருபோதும் அஸ்தமிக்காது" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User