"இடைத்தேர்தலில் ஸ்​டா​லின் நிற்பதற்​கு மறுப்பு தெரிவிக்க விரும்பவில்லை" - மு.வீரபாண்டியன் | Live Updates

Jun 30, 2026 - 08:32
0
"இடைத்தேர்தலில் ஸ்​டா​லின் நிற்பதற்​கு மறுப்பு தெரிவிக்க விரும்பவில்லை" - மு.வீரபாண்டியன் | Live Updates

ஸ்டாலின் பேச்சுக்கு மு.வீரபாண்டியன் பதில்

நேற்று முன்தினம் (ஜூன் 28, 2026) திமுக தலைவர் ஸ்டாலின், 'தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என்று பேசியிருந்தார்.

ஸ்டாலின் பேச்சுக்குப் பதில் தரும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், "முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பழுத்த அரசியல் தலைவர்.

கலைஞரிடம் அரசியல் பயின்றவர். இப்போதுதான் புதிய அரசு அமைந்து ஒரு மாதம் ஆகியிருக்கிறது.

மு.வீரபாண்டியன்
மு.வீரபாண்டியன்

இது மக்களின் முடிவு. இதை மதிக்க வேண்டும். ஜனநாயக முறையில் இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் அவர் சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால், இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என அவர் சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல.

இடைத்​தேர்​தலில் ஸ்​டா​லின் நிற்​ப​தற்​கோ, திரா​விடக் கட்​சிகளுக்கு ஆதர​வான பொது​வான வேட்​பாளர்​களை நிறுத்​துவதற்கோ மறுப்பு தெரிவிக்க விரும்​ப​வில்​லை" என்று பேசியுள்ளார்.

இன்றைய தமிழ்நாடு மற்றும் அரசியல் செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ ஃபாலோ பண்ணுங்க!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User