SRH vs KKR: "அந்த கடின உழைப்புக்கு கிடைத்த பலன்தான் இது.! - ஆட்டநாயகன் நிதிஷ் குமார் ரெட்டி

Apr 3, 2026 - 13:02
 0
SRH vs KKR: "அந்த கடின உழைப்புக்கு கிடைத்த பலன்தான் இது.! - ஆட்டநாயகன் நிதிஷ் குமார் ரெட்டி

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியான நேற்று (ஏப்ரல்.2) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் 65 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி அபார வெற்றி இருக்கிறது.

தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

SRH match
SRH match

விருது வென்ற பிறகு பேசிய நிதிஷ் குமார் ரெட்டி, " இந்த வெற்றியை தான் நான் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தேன்.

சரியான நேரத்தில் அணிக்கு எனது பங்களிப்பை ஆற்றியிருக்கிறேன். இந்த முறை மிகவும் பாஸிட்டிவாக இருக்க முயற்சி செய்தேன்.

ஏனென்றால் கடந்த சீசன் எனக்கு சரியாக அமையாதக் காரணத்தினாலும், காயங்கள் ஏற்பட்டிருந்ததாலும் என் மனதில் நிறைய நெகட்டிவான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

கடந்த முறை நான் பந்து வீசவில்லை. அதனால் இந்த முறை பயிற்சியின் போது பந்து வீச்சில் கவனம் செலுத்தினேன்.

எனக்குக் கிடைத்த இடைவேளையின் போது, இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக எனது பந்துவீச்சிற்காக மிகவும் கடினமாக உழைத்தேன்.

அந்த உழைப்பிற்கான பலன் தான் மைதானத்தில் தெரிந்தது. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நிதிஷ் குமார் ரெட்டி
நிதிஷ் குமார் ரெட்டி

நான் காயமடைந்திருந்தப்போது என்னைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்ட பயிற்சியாளர்களுக்கும், பிசியோதெரபிஸ்ட்களுக்கும் எனது நன்றிகள்.

இப்போது நான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0