நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு: ஆயுதங்களை சப்ளை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

Oct 21, 2026 - 14:01
0
நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு:  ஆயுதங்களை சப்ளை செய்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

மும்பையில் கடந்த சில நாட்களுக்கு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவர் கால்பந்து கிளப் ஒன்றுக்கு சென்றுவிட்டு வெளியில் வந்து காரில் இருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இத்துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் அவரது கார் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேர் டெல்லிக்கு ரயில் மூலம் தப்பிச்சென்ற போது ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கைது செய்யப்பட்டு மும்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குனால், சுமித், ராதா, பபிதா நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ராதா மற்றும் பபிதா டெல்லி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். மற்ற இருவரும் ஹரியானா மாநிலம் சோனிபட் என்ற இடத்தில் பிடிபட்டனர்.

பிடிபட்ட நான்கு பேரும், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு தேவையான ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள் ஆவர். இதில் குனால் மற்றும் சுமித் ஆகியோர் ஆயுதங்களை ஏற்பாடு செய்தனர்.

ராதாவும், பபிதாவும் அதனை மும்பைக்கு எடுத்து வந்து கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடமும் கொடுத்துள்ளனர். டெல்லி, ஹரியானாவில் கைது செய்யப்பட்ட 4 பேரும் மும்பை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றனர். குனால் சமீபத்தில்தான் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். குனால், லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த அனில் பண்டிட்டை சந்தித்து பேசி இருக்கிறான். இந்த சந்திப்பின் போது டைகர் ஷெராப்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டு அதற்கான பொறுப்பு குனாலிடம் ஒப்படைக்கப்பட்டது.

குனால் இரண்டு மாதத்திற்கு முன்பு இதற்காக துப்பாக்கி வாங்கி இருக்கிறான். ராதாவை சந்தித்து அந்த துப்பாக்கியை மும்பையில் கொடுக்கும்படி குனால் கேட்டுக்கொண்டார். இதையடுத்து ராதாவும், அவரது தோழி பபிதாவும் இம்மாதம் 15ம் தேதி டெல்லியில் இருந்து ரயில் மூலம் மும்பை வந்துள்ளனர். இரண்டு நாள் கழித்து அவர்கள் மும்பையில் உள்ள தாதர் சென்றுள்ளனர். அங்கு இரண்டு பெண்களும் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி இருந்த பேக்கை ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வாங்கிச்சென்றார். அடுத்த நாளே டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

துப்பாக்கியை கொடுத்துவிட்டு இரண்டு பெண்களும் உடனே அங்கிருந்து ரயில் மூலம் சென்றுவிட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், டைகர் ஷெராப்பை கொலை செய்து ஒரு வித பயத்தை பரவ விடதிட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் உண்மையில் டைகர் ஷெராப்பை கொலை செய்ய வரவில்லை என்றும், வேறு ஒரு முக்கிய பாலிவுட் பிரமுகரை கொலை செய்ய வந்ததாகவும், அந்த குறிப்பிட்ட நபர் அடிக்கடி செல்லும் இடங்களைச் சோதித்துப் பார்த்த பிறகு, அவரை அணுக முடியாது என்பதைத் உணர்ந்து திட்டத்தை மாற்றியதாக தெரிவித்தனர்.

ரசிகர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் (ரீல்ஸ்) மூலம், நடிகர் டைகர் ஷெராபிற்குப் போலீஸ் பாதுகாப்பு இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட அவர்கள், தங்கள் இலக்கை அவர் பக்கம் மாற்றிக்கொண்டனர் என்று விசாரணையில் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User