`அந்த அன்பும் கதகதப்பான காதலும் ஈர்த்தது..!' - பெத்லஹேம் குடும்ப யூனிட் படம் குறித்து கேரள முதல்வர்

Oct 21, 2026 - 21:32
0
`அந்த அன்பும் கதகதப்பான காதலும் ஈர்த்தது..!' - பெத்லஹேம் குடும்ப யூனிட் படம் குறித்து கேரள முதல்வர்

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவானப் படம் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம். கிராமத்துப் பின்னணியும், கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவுகளைக் காட்டிய விதமும், படத்தின் உருத்தலில்லா கதை சொல்லலுமே இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கேரள முதல்வர் வி.டி.சதீசன் திரைப்படத்தை பாராட்டியிருக்கிறார். இந்தத் திரைப்படம் குறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``மாதத்தில் ஒரு படமாவது பார்க்கும் வழக்கம் இருந்தது, ஆனால் பணிச்சுமைகள் காரணமாக அது விடுபட்டுப்போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றுதான் ஒரு திரைப்படத்தை ஒரே மூச்சில் பார்த்தேன்.

'பெத்லகேம் குடும்ப யூனிட்'
'பெத்லகேம் குடும்ப யூனிட்'

மகளுடனும் அவளுடைய தோழியுடனும் சேர்ந்து 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படத்தை மிகவும் ரசித்து பார்த்து முடித்தேன். இத்திரைப்படத்தின் உருவாக்கம்தான் இதை வித்தியாசப்படுத்துகிறது. சிறிதளவுகூட சலிப்பு ஏற்படவில்லை. என் இளமைக் காலத்தோடு உடனடியாக என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. அன்று நாங்கள் கண்ட கிராமப்புறங்கள், அங்கிருந்த மனிதர்கள், அங்கு பார்த்த சாதாரண வாழ்க்கை, அவர்களுக்கு இடையேயான அன்பு, கதகதப்பான காதல் என எல்லாவற்றாலும் நம்மை ஈர்த்து உட்கார வைத்த திரைப்படம் இது. பார்த்து முடித்த பிறகு, "இவ்வளவு காலம் பார்க்காமல் ஏன் தாமதித்தோம்?" என்றுதான் யோசிக்கத் தோன்றியது.

நாயகன், நாயகி என்று சொல்லக்கூடிய கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல், ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் மட்டுமே வருபவர்கள் கூட தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர். நன்றாகச் சிரிக்க வைத்தார்கள்... இடையில் சில இடங்களில் வருத்தப்படவும் வைத்தார்கள்... முதலிலிருந்து கடைசி வரை மிகவும் ரசித்துப் பார்த்தேன். இது ஒரு முழுமையான கூட்டு உழைப்பு.
ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவது வழக்கம் இல்லாத ஒன்றுதான்.

வி.டி.சதீசன்

ஆனால், அந்த அளவிற்கு ரசித்ததாலும் புத்துணர்ச்சி அடைந்ததாலும்தான் இதை எழுதலாம் என்று முடிவு செய்தேன். இயக்குநர் ஏ.டி. கிரிஷ் மற்றும் நடிகர் சங்கீத் பிரதாப் ஆகியோரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நிவின் பாலி மற்றும் மமிதா பைஜுவை போனில் தொடர்புகொள்ள முடியவில்லை. இவர்களுடன் சேர்ந்து என் மனதைக் கவர்ந்த மற்றொருவர் கிளிக்சன் (Glikson). பாவம் கிளிக்சன்! இத்திரைப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User