"இப்படியான ஒரு டிவி நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை!"-'மாஸ்டர் செஃப்' குறித்து சமந்தா

Oct 21, 2026 - 16:00
0
"இப்படியான ஒரு டிவி நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை!"-'மாஸ்டர் செஃப்' குறித்து சமந்தா

தமிழில் புதிய பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலாக, 'சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா' நிறுவனத்தின், 'சோனி விழா' அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்டது.

இதில் பிரபலமான 'செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜாம்பவான்களான செஃப் வெங்கடேஷ் பட் , செஃப் ஸ்ரேயா அட்கா, செஃப் சஷி செலியா ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

'மாஸ்டர் செஃப்'
'மாஸ்டர் செஃப்'

இவர்கள் மூவரும் தங்களது தனித்துவமான சமையல் அனுபவம், சர்வதேச அனுபவம் மற்றும் உணவின் மீதான ஆர்வத்துடன் போட்டியாளர்களுக்கு வழிகாட்ட இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.விஜய் தொகுத்து வழங்குகிறார்.

நடிகை சமந்தா சிறப்பு நடுவராக பங்கேற்றிருக்கிறார். இந்நிலையில் 'செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியின் புரொமோஷன் நேர்காணல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில் பேசியிருக்கும் சமந்தா, "இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. செலிப்ரிட்டி மாஸ்டர் செஃப் என்பது குடும்பமாக பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. சிறுவயதில் நானும் எனது அம்மாவும் எப்போதும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியைப் பார்ப்போம். அது எங்களுக்கான நேரம்.

'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி
'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி

பல வருடங்கள் கழித்து மாஸ்டர் செஃப்பில் செலபிரிட்டி ஜட்ஜ்ஜாக இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. டிவிக்கு வந்தால் இப்படியான ஒரு நிகழ்ச்சிக்குத்தான் வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை. இது நான் கலந்துகொள்வதற்கான சரியான நிகழ்ச்சி" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User