பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு கோவிலிலிருந்து சீர்வரிசை; நெகிழ வைத்த மதுரை தேனூர் கிராமம் மக்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் அனைத்துச் சமூக மக்களும் ஒற்றுமையோடு மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தேனூர் கிராமத்தில் நடைபெற்ற பள்ளி வாசல் திறப்பு விழாவில் கிராமப் பொதுமக்கள் சீர் வழங்கும் விழா நடைபெற்றது
சுந்தரவல்லி அம்மன் கோவிலில் இருந்து கிராமத்தினர் ஊர்வலமாக பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை எடுத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந்து தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
அனைத்துச் சமுதாய மக்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று நோக்கத்தோடு பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டதாக கிராமப் பெரியவர்கள் கூறினார்கள். இதேபோல் கடந்த மாதம் இந்தக் கிராமத்தில் நடைபெற்ற சுந்தரவல்லி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் பால்குட அக்னி சட்டி நிகழ்ச்சியில் இஸ்லாமியப் பொதுமக்கள் சர்பத் மோர் வழங்கி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய நிலையில் தற்போது நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்கள் சீர்வரிசை கொண்டு வந்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தேச ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் நினைவுபடுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்தது சீர் கொண்டு வந்ததும் இந்து சமூகத்தைச் சேர்ந்த கிராமப் பெரியவர்களுக்கு இஸ்லாமிய நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் இஸ்லாமியக் குழந்தைகள் அன்பளிப்புகள் வழங்கியும் இளைஞர்கள் வாசல் வரை வந்து வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றதும் அங்கு இருந்தவர்கள் மனதில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கிராமத்தில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக கிராம பெரியவர்கள் கூறினார்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)