Harish: ``என்னை முடக்கி பேச விடாம பண்ணிட்டாங்க; இவரை சும்மா விடாதீங்க"- இறுதியாக ஹரிஷ் சொன்னது என்ன?

Oct 21, 2026 - 23:01
0
Harish: ``என்னை முடக்கி பேச விடாம பண்ணிட்டாங்க; இவரை சும்மா விடாதீங்க"- இறுதியாக ஹரிஷ் சொன்னது என்ன?

‘ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்’ என்னும் பெயரில் சமூக வலைதளங்களில் நிதி சார்ந்த அறிவுரைகளை வழங்கி வந்த யூடியூபர் ஹரிஷ், சென்னை முட்டுக்காடில் உள்ள அவரது வாடகை வில்லாவில் தற்கொலை செய்துகொண்டார். இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருந்த இவரின் கணக்கு ஒரு மாதத்துக்கு முன்பு முடக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தெளிவான காரணங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், 'கம்யூனிட்டி கைட்லைன்ஸிற்கு எதிராகச் செயல்பட்டார்' என மெட்டா தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹரிஷ் தற்கொலைக்கு, யூடியூபர் ஜேசன் சாமுவேல்தான் காரணம் என ஹரிஷ் வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்.

ஜேசன் சாமுவேல்
ஜேசன் சாமுவேல்

அவர் வெளியிட்டிருக்கும் 36.57 நிமிட வீடியோவில் கூறியிருப்பதாவது, ``ஜேசன் சாமுவேல், என்னைப்பற்றிப் பொய்களைப் பரப்பி, வெறுப்பை உருவாக்கி, மேனிபுலேட் செய்து, 100 முதல் 150 பேரை விட்டுத் தொடர்ச்சியாக ரிப்போர்ட் செய்ய வைத்து என் இன்ஸ்டாகிராம் கணக்கை டிசேபிள் (Disable) செய்ய வைத்துள்ளார். ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதற்கு முன் அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் மற்றும் அதற்கான ஆதாரங்கள் (Proofs) இருக்க வேண்டும். ஆனால், எந்த ஆதாரமும் இல்லாத 2–3 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையே அவர் தெரிவித்திருக்கிறார்.

லெவல் அப் வித் ஹரிஹரன் என்பவருடன் இணைந்து நான் ஸ்கேம் செய்ததாக ஜேசன் சாமுவேல் கூறியுள்ளார். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக "டிரேடிங் செய்யாதீர்கள், செய்தால் நஷ்டம்தான் ஆகும்" என்று தமிழ்நாட்டிலேயே அதிக விழிப்புணர்வு வீடியோக்கள் போட்டது நான் மட்டுமே. 2023-ல் ஹரிஹரன் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்தபோது, அதில் கலந்துகொண்டு பேசிய சிறிய வீடியோ கிளிப்பை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு, நான் டிரேடிங்கை ப்ரொமோட் செய்து மணி லான்டரிங் செய்ததாகத் தவறான குற்றச்சாட்டை வைத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஃபைனான்ஸ் கண்டென்ட் கிரியேட்டராக இருந்து 1.3 மில்லியன் ஃபாலோவர்ஸைப் பெற்றிருந்தபோதிலும், ஒருமுறை கூட கம்யூனிட்டி ஸ்ட்ரைக் வந்ததில்லை.

ஹரிஷ்
ஹரிஷ்

ஆனால், போர்னோகிராபி, சைல்டு அப்யூஸ், ஸ்கேம் போன்ற பொய்யான காரணங்களைக் கூறி, போலி கணக்குகள் மூலம் மல்டிபிள் ஸ்ட்ரைக் கொடுக்கப்பட்டுதான் என் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மெட்டாவில் உள்ள தெரிந்த நபர் மூலம் விசாரித்தபோது, யாரோ சுமார் ரூ.8 லட்சம் பணம் கொடுத்து, ஒரு நபரின் மூலம் மேனுவலாக என் கணக்கை டிசேபிள் செய்ய வைத்திருப்பது தெரியவந்தது. என் கணக்கை மீட்பதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வந்த நேரத்தில், என்னை மேலும் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஜேசன் சாமுவேல் என் மீது பழி சுமத்தும்படியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜேசன் சாமுவேல் பற்றி விசாரித்தபோது அவர் ஒரு மிகப்பெரிய ஃபிராடு என்பதும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காகக் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு அடி வாங்கிச் சென்றவர் என்பதும் தெரியவந்தது. ஹெச்.என்.ஐ (HNI) நபர்களுக்குப் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் செய்வதாக நான் எங்குமே கூறவில்லை. நிலம், கார் வாங்குவது மற்றும் டாக்ஸ் சேவிங்ஸ் போன்ற பினான்சியல் விஷயங்களிலேயே அவர்களுக்கு வழிகாட்டினேன். மேலும், 2023-ல் "Suggested multibagger stocks" என்று ஸ்டோரி போட்டது செபி (SEBI) விதிப்படி தவறுதான் என்றாலும், அப்போது கண்டென்ட் கிரியேஷனுக்குப் புதியவனாக இருந்ததாலும், அப்போது எனக்கு வயது குறைவு என்பதாலும் வழிகாட்டுதல் இல்லாததாலுமே அப்படி நடந்தது. அதை பின்நாள்களில் திருத்திக்கொண்டேன்.

செபி

இதுவரை நாம் யாருடைய பணத்தையும் வாங்கி டிரேடிங் செய்து கொடுத்ததோ, போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் செய்ததோ கிடையாது. நாம் இருக்கும் வீடு சொந்த வீடு என்று எப்போதுமே கூறியதில்லை. காரும் பிசினஸ் தேவைக்காகவே வாங்கப்பட்டது. ஆனால், இவற்றை வைத்து தேவையில்லாமல் என் மீது வெறுப்பை உருவாக்க முயன்றிருக்கிறார். எனக்கு ஆதரவாக இருந்த டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், சந்தோஷ் பிரேம் போன்றவர்களைப் பற்றியும் ஜேசன் சாமுவேல் தேவையில்லாமல் தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறார். அவரது ஃபாலோவர்ஸைத் தூண்டிவிட்டு, என் மீது மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வைக்கிறார். கடந்த இரண்டு நாட்களாகத் எனக்கு எதிரான கடுமையான ஹராஸ்மென்ட் நடந்து வருகிறது.

பங்குச்சந்தை அல்லது செக்யூரிட்டீஸ் பற்றிப் பேசாமல் எமர்ஜென்சி ஃபண்ட், கடன் மேலாண்மை போன்ற பொதுவான பினான்சியல் (Personal Finance) ஆலோசனைகளை வழங்குவதற்குக் கட்டணம் பெறுவதில் எவ்வித லீகல் தவறும் இல்லை. 2023-ல் எனக்கிருந்த அனுபவமின்மையால் Disclaimer போடாமல் சில வீடியோக்களைப் பதிவிட்டது உண்மைதான் என்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு தனிப்பட்ட ஸ்டாக்கையும் வாங்குமாறு நான் பரிந்துரைத்ததே இல்லை. நான் யாருடைய பணத்தையும் ஏமாற்றவில்லை. ஜேசன் சாமுவேலைப் போல பிறரை மிரட்டிப் பணம் பறிக்கும் தொழிலை செய்யாமல் நேர்மையாகவே பினான்சியல் சேவைகளை வழங்கி வருகிறேன்.

ஹரிஷ்
ஹரிஷ்

எந்தவொரு சமூக அல்லது குடும்பப் பின்னணியும் இல்லாமல், சுயமாகக் கஷ்டப்பட்டு முன்னேறி கோட்-சூட் அணிவதைக்கூட விமர்சிப்பது மனவேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் அருத்ரா ஸ்கேம் போன்ற பெரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் டிரேடிங் ஸ்கேம்கள் நடந்தபோது வாய்திறக்காதவர்கள், இன்று பிரபலமடைந்து உயர்ந்து வரும் நபர்களைப் பற்றித் தவறான அவதூறுகளைப் பரப்பி அவர்களின் பெயரைக் கெடுக்க முயல்கிறார்கள். 5 ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த பெயரைக் கெடுத்து, உண்மையை நிரூபிக்க ஒரு பிளாட்ஃபார்ம் கூட இல்லாமல் நான் முடக்கப்பட்டிருக்கிறேன். மனதளவில் உடைந்துபோய் புதிதாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினேன். அதையும் ரிப்போர்ட் செய்து பேன் செய்யுமாறு ஜேசன் சாமுவேல் தனது வீடியோவில் தூண்டிவிடுகிறார்.

ஜேசன் சாமுவேல் எதற்காக இப்படிச் செய்கிறார் என்பதன் பின்னணி அண்மையில்தான் எனக்குத் தெரியவந்தது. `2023-24 காலக்கட்டத்தில் வருமான வரி (Income Tax) முறையாகச் செலுத்தியிருக்க மாட்டாய், வரி ஏய்ப்பு செய்திருப்பாய். அதை வெளியே சொல்லாமல் இருக்கவும், செபியில் (SEBI) புகார் அளித்து ஜெயிலில் தள்ளாமல் இருக்கவும் எனக்கு 3 நாட்களுக்குள் சில கோடிகளைப் பணமாகக் கொடு. இல்லைனா உன்னை மட்டும் இல்ல உனக்கு ஆதரவாக இருக்கும் டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் மற்றும் சந்தோஷ் பிரேம் மாதியான ஆட்களின் வரலாறையும் தோண்டித் துருவி அவர்களுக்கு எதிராகவும் வீடியோ போடுவேன். நீ பணம் கொடுக்கும் வரை இது தொடரும்' என மிரட்டினார்.

ஜேசன் சாமுவேல்
ஜேசன் சாமுவேல்

என் இன்ஸ்டாகிராம் கணக்கு முடங்கியபோது, ஜேசன் சாமுவேலிடம் பேசினேன். அதற்குரிய ஆடியோ ஆதாரங்கள் என் நண்பர்களிடம் இருக்கிறது. நான் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன் என்பதால், `எனக்கு எம்.எல்.ஏ, எம்.பி ஏன் பாண்டிச்சேரி முதல்வர் வரைக்கும் தெரியும். பணம் கொடுக்காவிட்டால் உன் குடும்பத்தையும், வாழ்வாதாரத்தையும் டார்கெட் செய்து முழுமையாக அழித்துவிடுவேன்' என மிரட்டினார். `பணம் தரும் வரை பார்ட் 2, பார்ட் 3 வீடியோக்கள் போட்டு உன்னை ஹராஸ்மென்ட் செய்வேன். புதிய கணக்கு தொடங்கினாலும் அதை பேன் செய்ய வைப்பேன்' என ஜேசன் சாமுவேல் தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

இதுபோன்று பொய் அவதூறுகளைப் பரப்பி, ஒருவரின் உழைப்பை அழிக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும். என் குடும்பத்தினருக்கும், 1.3 மில்லியன் ஃபாலோவர்ஸ்களுக்கும் நன்றி. தமிழ்நாட்டில் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்த நினைப்பவர்களை இதுபோன்ற நபர்கள் ஹராஸ்மென்ட் செய்து பணம்பறிக்க அனுமதிக்கக் கூடாது. உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசிவிடக் கூடாது என்பதற்காகவே இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தேன். ஆனால் இந்த நாட்களில் எனக்கும் என் நண்பர்களுக்கும் கடுமையான தொந்தரவுகள் கொடுக்கப்பட்டது.

ஜேசன் சாமுவேல்
ஜேசன் சாமுவேல்

உண்மை என்னவென்று மக்களுக்கும், சக கண்டென்ட் கிரியேட்டர்களுக்கும், என்னைப் பின்தொடர்பவர்களுக்கும் தெரிய வேண்டும். ஒரு நற்பெயர் கொண்ட படைப்பாளிக்கே இந்த அளவிற்குக் கெடுபிடி கொடுத்துப் பணம் பறிக்க முடியும் என்றால், நாளைக்குத் தமிழ்நாட்டின் நன்மைக்காக உழைக்க நினைக்கும் வேறு யாரையும் இதுபோன்ற நபர்கள் வாழ விடமாட்டார்கள் என்பதால் ஜேசன் சாமுவேல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதித் துறையில் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாகத் நான் எதிர்கொள்ளும் நெருக்குதல்கள், டிவி சேனல்களில் பேட்டி கொடுக்க விடாமல் தடுப்பது, விருது வழங்கி கவுரவிக்க விடாமல் தடுப்பது போன்ற பல துறை சார்ந்த அரசியல்களை எதிர்கொண்டு வந்தேன். கோட்-சூட் அணிந்து பேசுவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத சாதியப் பாகுபாடு, பொறாமை உணர்வே இதன் பின்னணியில் உள்ளது. எனக்கு தைரியம் கூறி ஆதரவளித்த என் பாளோவர்ஸ், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் உள்ளிட்ட நண்பர்கள், என் பெற்றோர் ஆகியோருக்கு நன்றி. உங்களிடம் என் இந்த முடிவுக்கு மனவேதனையுடன் மன்னிப்பு கேட்கிறேன். இறுதியாக, ஜேசன் சாமுவேல் போன்ற நபர்களைச் சும்மா விட்டுவிடாதீர்கள்." எனப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User