``அமீர் கானைக் கொல்பவருக்கு ரூ.5 கோடி பரிசு" - பகிரங்க மிரட்டல் விடுக்கும் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா

Jul 15, 2026 - 10:01
0
``அமீர் கானைக் கொல்பவருக்கு ரூ.5 கோடி பரிசு" - பகிரங்க மிரட்டல் விடுக்கும் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா

பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகுக் கலை நிபுணரான கௌரி ஸ்ப்ராட் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

மும்பையில் பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான முறையில், இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இந்தத் திருமணத்திற்கு பா.ஜ.க மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துவருகின்றனர்.

அமீர் கான் - Aamir Khan
அமீர் கான் - Aamir Khan

அதன் தொடர்ச்சியாக அயோத்தி தபஸ்வி சாவனியின் தலைவரான ஜெகத்குரு பரம்ஹன்ஸ் ஆச்சார்யா செய்தியாளர்களிடம் பேசியபோது, ``அமீர் கான் இந்து பெண்களைத் திருமணம் செய்ததன் நோக்கம் 'லவ் ஜிகாத்'தை ஊக்குவிப்பதே. நடிகர் அமீர் கானைக் கொலை செய்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.

இந்தத் தொகையானது அந்தச் செயலைச் செய்பவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். மேலும், இதற்கான சட்டப்பூர்வ செலவுகளையும் நானே ஏற்கிறேன். இத்தகைய நடவடிக்கைகள் 'லவ் ஜிகாத்' என்று கூறப்படும் செயல்களைத் தடுக்கும். இந்துp பெண்களை வலைவீசிப் பிடிக்கும் நபர்களை சும்மா விடக்கூடாது.

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் நடைபெற்று வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நேர்மையாக நடந்து வருகிறது. ராமர் மீது பற்று இல்லாதவர்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சர்ச்சைகளை உருவாக்குவார்கள். எனவே, கவனமாக இருங்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User