இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்; ஏற்கெனவே ரூ.7 உயர்வு; இன்னும் எவ்வளவு உயரலாம்?

Jun 01, 2026 - 13:02
0
இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்; ஏற்கெனவே ரூ.7 உயர்வு; இன்னும் எவ்வளவு உயரலாம்?

ஈரான் போர் காரணமாக, இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றாமல் மத்திய அரசு சமாளித்தது.

ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் தினம் தினம் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்ததால், இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கையிலெடுத்தது.

அதன்படி, எண்ணெய் விலை உயர்வையும், நஷ்டத்தையும் சமாளிக்க முதன்முதலாக மே 15-ம் தேதி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டது.

கேஸ் சிலிண்டர்
கேஸ் சிலிண்டர்

இன்று ஐந்தாவது முறையாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்ந்து ரூ.107.87-க்கும், டீசல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.99.56-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

மே 15-ம் தேதி முதல் சென்னையில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.7.07 உயர்ந்துள்ளது... டீசல் விலை ரூ.7.11 உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை மட்டும் இன்று உயர்வா என்று பார்த்தால், கிடையாது. வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலையும் இன்று ஏற்றப்பட்டுள்ளது.

இன்னும் எத்தனை ரூபாய்?

இதுவரை நான்கு முறை விலை ஏற்றப்பட்டுள்ள வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் (19 கிலோ), இன்று ரூ.46 உயர்ந்து ரூ.3,283-க்கு விற்பனை ஆகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இத்துடன் முடிந்தது என்று நினைத்துவிட வேண்டாம். பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயரும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பொருளாதார நிபுணர்களின் கணிப்புப் படி, பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக ரூ.10 வரை உயரலாம். ஏற்கெனவே ரூ.7 உயர்ந்துவிட்ட நிலையில், இன்னும் ரூ.3 உயரலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User