பழனிசாமி & வேலுமணி! அதிமுக-வில் மட்டும் இருவருக்கு வாய்ப்பு வழங்கிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் | TN News Live Updates
அதிமுக-வில் மட்டும் இருவருக்கு வாய்ப்பு..!

ஜே.சி.டி.பிரபாகர் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள். கட்சிக்கு ஒரு உறுப்பினர் என்ற வகையில் பேசி வருகிறார்கள்.
அதிமுக சார்பில் முதலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசி முடித்ததும், தனக்கு பேச வாய்ப்பு வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோரிக்கை வைத்தார், அதனை தொடர்ந்து சபாநாயகர் அவருக்கும் பேச வாய்ப்பு வழங்கினார்.
முன்னதாக, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், ``அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்ந்தெடுத்துள்ளோம். கொறடவாக டாக்டர் விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்." என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
நாங்களும் நம்புகிறோம்! - அமமுக காமராஜ்
அமமுக எம்.எல்.ஏ காமராஜ் சட்டமன்றத்தில் பேசுகையில், “தவெகவுக்கு அமமுக ஆதரவு அளிக்கிறது. இளைஞர்கள் உங்களை நம்புகிறார்கள்.. நாங்களும் நம்புகிறோம்” என்று பேசினார்.
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!
நேற்று தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தேர்விற்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் மட்டுமே போட்டியிட்டார்.
இதனால், போட்டியின்றி இன்று ஜே.சி.டி.பிரபாகர் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
பெரியகருப்பன் வழக்கில் இன்று தீர்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில் 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்தார்.
'மீண்டும் வாக்கெடுப்பு வேண்டும்' என்று பெரிய கருப்பன் தொடுத்திருந்த வழக்கிற்கு இன்று சென்னை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்குகிறது.
இன்றைய அரசியல் நிகழ்வுகள்
தமிழ்நாடு தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி, தமிழ்நாடு முதல்வரும் பொறுப்பேற்றாகிவிட்டது. ஆனால், இன்னும் அரசியல் களம் சூடாகவே இருக்கிறது.
ஒரு வார போராட்டம், அலைச்சல்களுக்கு பிறகு, தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் எப்படியோ பிரச்னைகளை முடித்து செட்டில் ஆக, அதிமுகவின் புகைச்சல் இப்போது வெளியே வந்திருக்கிறது.
இது உட்பட இன்று தமிழ்நாட்டில் என்னென்ன அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை இந்த Live -ல் தெரிந்துகொள்ளுங்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)