ஊட்டி: 7 லட்சம் பூக்களில் சென்னை சென்ட்ரல், மகாபலிபுரம்! - 10 நாள்கள் நடைபெற இருக்கும் ஃபிளவர் ஷோ

May 18, 2026 - 13:01
0
ஊட்டி: 7 லட்சம் பூக்களில் சென்னை சென்ட்ரல், மகாபலிபுரம்! - 10 நாள்கள் நடைபெற இருக்கும் ஃபிளவர் ஷோ

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்காவில் 128- வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது.‌ உள்ளூர் அரசு விடுமுறையுடன் தொடங்கிய இந்த மலர் கண்காட்சி தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற இருக்கிறது.

ஊட்டி மலர் கண்காட்சி

தேர்தல் காரணமாக நடப்பு ஆண்டுக்கான நீலகிரி கோடை விழா தாமதமாக தொடங்கினாலும், வழக்கமான உற்சாகத்திற்கு குறைவில்லாமல் களைகட்டி வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் கோடை மழையின் குளிர்ச்சியை அனுபவித்து வாறு மலர் கண்காட்சியை மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

நூற்றாண்டு சிறப்பு வாய்ந்த ஊட்டி மலர் கண்காட்சி குறித்து பூங்கா நிர்வாகத்தினர், " ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 128- வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. வரவிருக்கும் 28 ம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மலர் கண்காட்சியில் 7 லட்சம் கொய் மலர்களால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்,

ஊட்டி மலர் கண்காட்சி

மகாபலிபுரம் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு மாதிரி மலர் அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 275 வகைகளில் 7 லட்சம் செடிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலர் மாடங்களிலும் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் தங்களின் விருப்பம் போல் கண்டு ரசிக்கலாம்" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User