`ஆபாச பேச்சு' - பிரபல இன்ஸ்டா தம்பதி கிருஷ், ஐஸ்வர்யா மீது சைபர் க்ரைமில் புகார்!

May 30, 2026 - 16:32
0
`ஆபாச பேச்சு' - பிரபல இன்ஸ்டா தம்பதி கிருஷ், ஐஸ்வர்யா மீது சைபர் க்ரைமில் புகார்!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம்  மூலம் பிரபலமடைந்த தம்பதி கிருஷ் - ஐஸ்வர்யா. இவர்களது சமூக வலைதள பக்கங்களை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியின் சமூக வலைதள பக்கத்தில்  ஆபாச தன்மை கொண்ட காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஆபாச இணையதளம் விளம்பரப்படுத்தப்படுவதாகவும் கோவை சைபர் கிரைம் காவல் துறையில் வழக்கறிஞர் நவேஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கிருஷ்- ஐஸ்வர்யா
கிருஷ்- ஐஸ்வர்யா

இந்த வீடியோக்கள் சிறுவர்கள் உட்பட பொதுமக்களை போர்னோகிராபி கன்டென்டுகளை ஈர்க்கும் வகையிலும், ஆபாச திரைப்படங்களில் நடிப்பதை பெருமைப்படுத்தி சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகிய சட்டங்களின் கீழ் இது குற்றம்  என்றும்,  சமூக வலைதளங்கள் மூலம் ஆபாச இணையதளங்களை விளம்பரப்படுத்துவது இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் மனநலத்திற்கும் சமூக ஒழுக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும், பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிருஷ்- ஐஸ்வர்யா
கிருஷ்- ஐஸ்வர்யா

பிரபல இன்ஸ்டா தம்பதி கிருஷ் மற்றும் ஐஸ்வர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஆபாச காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் நவேஷ் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User