'விசுவாசத்திற்கு ஓ.பன்னீர்செல்வம்; துரோகத்திற்கு பழனிசாமி' – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்

Mar 8, 2026 - 07:32
 0
'விசுவாசத்திற்கு ஓ.பன்னீர்செல்வம்; துரோகத்திற்கு பழனிசாமி' – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாசல்

மதுரையில் நடைபெற்ற ஓ.பன்னீர்செல்வம் இணைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த மேடை வித்தியாசமான மேடை. இதில் ஓபிஎஸ் இருப்பார் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நானும் ரசிகன். கழகம் அவரை வளர்த்தது அவரும் கழகத்தை வளர்த்தார்.

அதிமுக யாருக்கோ அடிமை சேவகம் செய்ய போனதால் உரிமை குரல் எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் தாய் கழகம் திரும்பியிருக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்

2008ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான விவாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதை குறிப்பிட்டு அடுத்த நாள் அவரை 'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்' என்று செய்தி வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி. தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது .

ஓபிஎஸ் ஸ்பெஷலிட்டியே அவருடைய சிரித்த முகம்தான் ஆனால் அந்த சிரிப்பே அவருக்கு பிரச்சனையாகி விட்டது. என்னை பார்த்து ஒரு முறை சிரித்து விட்டார். அதை ஒரு போர் போல சித்தரித்து பேச தொடங்கி விட்டார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்

நாம் எந்த அரசியல் கட்சியல் இருந்தாலும், வெளியில் பார்க்கும் போது நலம் விசாரிப்பது தான் அரசியல் பண்பு. அமைதியின் புன்னகை மட்டுமல்ல ஓபிஎஸ், விசுவாசம் என்றாலும் ஓபிஎஸ் பெயர்தான் தான் நியாபகம் வருகிறது.

ஜெயலலிதா தான் அமர்ந்திருந்த இருக்கையில் இரண்டு முறை ஓபிஎஸ்ஸை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த ஆட்சியை எந்த துரோகமும் இல்லாமல் திருப்பி கொடுத்தவர் ஓபிஎஸ்.

விசுசாசத்திற்கு ஓபிஎஸ் என்றால் துரோகத்திற்கு எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

கூவத்தூரில் தவழ்ந்து பதவியை பிடிததவர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு பதவியை கொடுத்தவர்களிடமே 'நீ எனக்கு பதவியை கொடுத்தாயா' என கேட்டவர். தன்னை காப்பாற்றி கொள்ள எது வேண்டுமானலும் செய்வார். தற்போது தன்னை காப்பாற்ற அதிமுகவையே அடமானம் வைத்திருக்கிறார்.

பாஜக நல்லது செய்யும் என நினைக்கிறார், அவர்கள் நல்லது நினைக்க மாட்டார்கள்.

பாஜக அதிமுகவின் ரத்ததை உரிஞ்சி விடும். 10 முறை முதலமைச்சராக இருந்த நிதிஷையே பாஜக பந்தாடியது. எனக்கு கிடைத்த தகவல் படி நிதிஷ்குமாருக்கு பதிலாக பாஜக சார்பில் வேறு ஒருவரை நியமிக்க இருக்கிறார்கள். அதே போல தான் பழனிசாமிக்கு பதிலாக வேறு ஒருவரை பொதுச் செயலாளராக மாற்ற போகிறார்கள், இந்த தேர்தல் முடிந்ததும் மாற்றி விடுவார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்

மோடி அதிமுக பெயரை சொல்ல மாட்டார். இரண்டு விரல் காட்டிய படத்தையே மாற்றி விடுவார்கள்.

திமுக வெற்றிபெறும் என பா.ஜ.க., நினைத்ததால் தான் நமது பிரச்சார பீரங்கியை ஆளுநர் ஆர்.என் ரவியை மாற்றியுள்ளனர். என்னை மீண்டும் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமெனவே அவர் கிளம்பி சென்று விட்டார். அவரை தேர்தல் முடியும் வரை தமிழ்நாடு ஆளுநராக தொடர வைக்க வேண்டும் என மத்திய அரசிடம் எவ்வளவோ கோரிக்கை வைத்தேன் அதையும் அவர்கள் நிறைவேற்றவில்லை" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0