`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி
மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கணவர் நாக்பூரில் பணியாற்றி வந்த நிலையில் அப்பெண் நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
அப்பெண்ணை தாஜ் வார்தாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார் அய்யாஸ் தாஜ். ஒரு நிலம் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கூறி அழைத்தார். அப்பெண்ணும் தனது நண்பர் என்ற முறையில் அவர் அழைத்த ஹோட்டலுக்கு சென்றார். ஆனால் ஹோட்டல் அறையில் அப்பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்து அப்பெண் மயக்கத்தில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்தார்.
அதோடு அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பல முறை அதனை காட்டி மிரட்டி கடந்த ஒரு ஆண்டாக மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.

அதுமட்டுமல்லாது அப்பெண்ணை மிரட்டி ரூ.3 லட்சத்திற்கும் அதிகமாக பணம் வாங்கினார். இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அவரிடம் நடந்த சம்பவம் குறித்து அப்பெண் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் சேர்ந்து இது குறித்து போலீஸில் புகார் செய்தனர்.
அப்பெண் தனது புகாருக்கு ஆதாரமாக ஒரு காணொலியையும் போலீஸில் கொடுத்துள்ளார். அதில், அப்பெண் சோடோ முஜே (என்னை விட்டு விடு) என்று கூறி அழுகிறார். ஆனால் அப்பெண்ணின் கைகளை வலுக்கட்டாயமாக பிடித்துக்கொண்ட அய்யாஸ் தாஜ் மத வசனங்களைப் கூறுகிறார். அவரது பிடியில் இருந்து விடுவித்துக்கொள்ள அப்பெண் போராடுகிறார். பின்னர் தான் மதம் மாறியதாக அறிவிக்கப்பட்டதாகவும், அதன்பிறகு தன்னை வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அய்யாஸ் தாஜ் மற்றும் அவரது நண்பர் அமீன் ஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்பெண் கொடுத்துள்ள புகாரில், கடந்த மே மாதம் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை நாக்பூரில் உள்ள கல்மேஷ்வருக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அமீன் ஷேக் மற்றும் ஹஸ்ரத் மௌலானாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறினார். அவர்கள் மூன்று பேரும் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று, சில மத சடங்குகளை நடத்தி அவரது மத மாற்றம் முடிந்ததாகக் கூறினர். பலாத்காரம், மிரட்டி பணம் பறித்தல், மத மாற்ற முயற்சி, அகோரி நடைமுறைகள் மற்றும் சூனியம் சட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)