”என் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் தரவில்லை” - போதையில் செவிலியர், உறவினர்களை தாக்கிய தந்தை!

Oct 04, 2026 - 23:00
0
”என் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் தரவில்லை” - போதையில் செவிலியர், உறவினர்களை தாக்கிய தந்தை!

கும்பகோணம், பட்டீஸ்வரம் அருகே உள்ள முழையூர், பகுதியை சேர்ந்த தம்பதி மதன்(28)– வனிதா. இவர்களுக்கு, கடந்த 16ம் தேதி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியராக பணியாற்றுபவர் கடலுார் மாவட்டம், சுரப்குப்பம் பகுதியைச் சேர்ந்த அலமேலு(35) இவர் மதன் குழந்தை பிறப்பு குறித்து தங்கமோதிரத்திற்கு பதிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

தாய்மாமன் தங்க மோதிரம் தகராறு குறித்து விசாரணை

இந்நிலையில், மதன், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில், தன் மகனுக்கு மோதிரம் கேட்டு அலமேலு உடன் தகராறு செய்துள்ளார். அதற்கு அலமேலு, சீனியாரிட்டி படி தான் ஒவ்வொரு குழந்தைக்கும் மோதிரம் வழங்குவார்கள் என்கிற விபரத்தை கூறி மதனை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் சத்தம்போட்டுக் கொண்டே மதன் சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து, மதன் மதுபோதையில், அலமேலு தங்கியுள்ள அரசு குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்கு மோதிரம் கேட்டு சண்டை போட்டுள்ளார். மேலும் வீட்டுக்குள் கற்களை வீசி ரகளை செய்துள்ளார். வீட்டில் இருந்த அலமேலுவின் சித்தி சுஜாதா(50) மற்றும் அலுமேலுவின் சகோதரர் சுமன்(43) ஆகிய இருவரும் மதனை தடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் அலமேலு, வீட்டுக்கு வந்து இதை கேட்கலாமானு சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, போதை தலைக்கேறிய நிலையில் ஆத்திரமடைந்த மதன், அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து மூவரையும் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்.

கும்பகோணம் அரசு மருத்துவமனை

இதில், அலமேலு மற்றும் சுமனுக்கு கையிலும், சுஜாதாவுக்கு தலையிலும் காயமடைந்த நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பட்டீஸ்வரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மதனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User