தாய்மாமன் தங்க மோதிரம்: "திராவிட மாடல் அரசின் திட்டத்தைப் பின்பற்றுகிறார்" - விஜய்யைச் சீண்டிய மேயர்

Jul 29, 2026 - 12:32
0
தாய்மாமன் தங்க மோதிரம்: "திராவிட மாடல் அரசின் திட்டத்தைப் பின்பற்றுகிறார்" - விஜய்யைச் சீண்டிய மேயர்

ஜூலை மாதத்துக்கான சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இதில் உரையாற்றிய மேயர் பிரியா முதல்வர் விஜய்யைச் சீண்டும் வகையில் பேசியிருந்தார்.

மேயர் பிரியா
மேயர் பிரியா

அவர் பேசியதாவது, ''திமுகவைப் பலவீனப்படுத்த முயற்சிக்கும் திமுக கூட்டணியிலிருந்து போனவர்களின் முயற்சி பலிக்காது.

திமுக எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் பின்னிப் பிணைந்துள்ளது.

சங்கு சுட்டாலும் மேன்மை தரும். அது போல திமுக தன்னுடைய கொள்கைகளில் இருந்தும் சமரசம் செய்து கொள்ளாமல் என்றென்றும் மக்கள் மனதில் நீக்கமற நிலைத்திருக்கும்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உட்கட்டமைப்பு, வணிக சூழல், வளம், நிதிநிலை மேலாண்மை, சுற்றுச்சூழல் என அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்துள்ளது. முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்தது.

முதலீட்டுக்கு உகந்த வணிக சூழல், மின் வசதியும் இருந்ததாகக் கூறப்பட்டது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அஞ்சாமல் மக்கள் பணிகள் தொடரும்.

தமிழ்நாட்டில் அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டுள்ளார்கள் எனச் செய்திகளில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உயர்ந்ததற்கு திராவிட மடல் அரசுதான் காரணம் எனப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி விளையாட்டு துறையில் ஆற்றிய பங்கு அளப்பரியது. அவரது சீரிய முயற்சியில் விளையாட்டுத்துறை எண்ணற்ற பல சாதனைகளைப் படைத்தது.

தமிழ்நாடு அரசு 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் அறிவித்துள்ளது.

2006 முதல் 2011 வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகு தமிழ் பெயர் சூட்டினால் மாநகராட்சி சார்பில் தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆக, திராவிட மாடல் அரசின் திட்டங்களைத்தான் மற்ற அரசுகளும் பின்பற்ற வேண்டியிருக்கிறது'' என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User