`முதல்வர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை; அதே சீமான் பற்றி பேசினால் இல்லையா?' - நீதிமன்றம் கேள்வி

Jul 29, 2026 - 12:32
0
`முதல்வர் விஜய் குறித்து பேசினால் நடவடிக்கை; அதே சீமான் பற்றி பேசினால் இல்லையா?' - நீதிமன்றம் கேள்வி

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில், `நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 100 கோடி ரூபாய் பெற்றதாக அடிப்படை ஆதாரமற்று அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட  யூடியூபர் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கெளரி, "திமுக எம்.எல்.ஏ முதல்வர் விஜய்யைப் பற்றி அவதூறாகப் பேசியதற்கு நடவடிக்கை எடுக்கிறீர்கள். பழனி நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பற்றி வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறீர்கள்! ஆனால் சீமான் பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..?

விஜய், சீமான்

அரசியலில் வெற்றி தோல்வி வரும், போகும்... ஆனால் தமிழகத்தில் சீமான் தவிர்க்க முடியாத ஒரு தலைவர். இந்த மாதிரியான விஷயங்களை நீதிமன்றம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது.

சீமான் குறித்து அவதூறாகப் பேசிய யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் மார்பிங் செய்யபட்ட புகைப்படங்களை இன்றைக்குள் நீக்கிவிட்டு நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User