`தலைவர்களின் பெயர்கள் தவறாக உச்சரிப்பு' - மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!

Jun 18, 2026 - 11:02
0
`தலைவர்களின் பெயர்கள் தவறாக உச்சரிப்பு' - மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியிருக்கிறது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது.

இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள் என்பதால், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தவெக - சட்டபேரவை கூட்டத் தொடர்
தவெக - சட்டபேரவை கூட்டத் தொடர்

இரண்டு நாட்கள் பயிற்சி முகாமை முடித்துவிட்டு, இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு ஆளுங்கட்சியினர் எப்படி பதிலளிக்கப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு, முதல்வராக விஜய் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு ஆகியவை நடைபெற்றன. சட்டமன்றத்தில் தவெக அரசு, பெரும்பான்மையை நிரூபித்த பிறகு சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு முதலாவது சட்டபேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வருகிறது.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தற்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரை நிகழ்த்துகையில், தமிழக அரசின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்களைத் தவறாக உச்சரித்தார்.

இவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு முடித்த பிறகு, தவறான உச்சரிப்பிற்கு ஆளுநர் மன்னிப்பும் கேட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User