மதுரை: ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளி மாணவிகள் புகார் - 4 பேர் மீது வழக்குப் பதிவு

Aug 21, 2026 - 08:00
0
மதுரை: ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளி மாணவிகள் புகார் - 4 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2025-26ல் பயின்ற +2 மாணவிகளுக்கு நேரடியாகவும், போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாக இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் மீது மாணவிகள் சிலர் மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் ரகசிய புகார் மனு அளித்துள்ளனர்.

இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது
கைது

காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியில் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜ்குமார் மீது பள்ளி முதல்வரிடம் ஏற்கனவே மாணவிகள் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், புகார் தெரிவித்த மாணவிகளிடமும் காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர்  ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User