LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன?

May 29, 2026 - 21:31
0
LSG: கேப்டன் பதவியில் இருந்து விலகிய ரிஷப்; லக்னோ அணி வெளியிட்ட அறிவிப்பு என்ன?

லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி மொத்தம் 14 போட்டிகளில் விளையாடியது.

lsg team
lsg team

இதில் 4 போட்டிகளில் மட்டுமே பெற்ற அந்த அணி, 10 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது.

ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை. இதனால் ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி மற்றும் தனிப்பட்ட ஆட்டம் மீது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தான் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி இருக்கிறார். இதனை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக அணி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், " லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ரிஷப் பந்த் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளதையும், அவரது கோரிக்கையை அணி நிர்வாகம் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விரும்புகிறது.

லக்னோ அணி நிர்வாகம்
லக்னோ அணி நிர்வாகம்

ரிஷப் இந்தக் கோரிக்கையுடன் அணி நிர்வாகத்தை அணுகினார், அதை நாங்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டோம். இத்தகைய முடிவுகள் எளிதல்ல. கேப்டனாக ரிஷப் அளித்த பங்களிப்பிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

அணியை மீண்டும் கட்டமைப்பதிலும் மற்றும் மறுசீரமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்" என லக்னோ அணியின் கிரிக்கெட் இயக்குநர் டாம் மூடி தெரிவித்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User