K.P. Vidhyadharan|2026 செப்டம்பர் மாத மேஷ ராசிபலன்கள்!

Aug 18, 2026 - 08:31
0
K.P. Vidhyadharan|2026 செப்டம்பர் மாத மேஷ ராசிபலன்கள்!

மனதில் இருந்த வீண் பயம், குழப்பங்கள் அனைத்தும் விலகும்; தைரியம் பிறக்கும். எதையும் துணிச்சலாக முடித்துக் காட்டுவீர்கள். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முறையில் மார்க்கெட்டிங் செய்வீர்கள்.

மேஷம்

ராணுவம், காவல் துறை, விளையாட்டு மற்றும் நிர்வாகத் துறைகளில் சிறந்து விளங்குவீர்கள். 4-ல் குரு உச்சம் பெற்று இருப்பதால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். பழைய வாகனங்களை விற்றுவிட்டுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் சிறு சிறு விபத்துகள் வர வாய்ப்பு உண்டு. ஆகவே, வாகனப் பயணத்தில் கவனம் தேவை.

தாயாரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். சிலநேரங்களில், அவர் உரிமையோடு உங்களிடம் சில விஷயங்களைப் பேசுவார்கள். அதுபற்றி தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். சுப காரியங்கள் நடைபெறும்.

குரு 8, 10, 12-ம் வீடுகளைப் பார்ப்பதால், இதுவரை உங்களை வாட்டி வதைத்த கடன் தொல்லைகள் தீரும். சிலருக்கு, வெளிநாடு செல்ல வீசா கிடைக்கும். 5-ல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், அரசு வழியில் ஆதாயம், பதவி உயர்வு உண்டாகும்; ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.

செப்டம்பர் 17-க்குப் பிறகு 6-ல் சூரியன் செல்லும்போது கோர்ட்டு கேஸ் சாதகமாகும். 5-ல் புதன் இருப்பதால் குழந்தைகளால் பெருமை உண்டாகும். குழந்தைகள் புத்திசாலியாகவும் பொறுப்பாகவும் நடந்துகொள்வார்கள். செப்டம்பர் 14 -க்கு பிறகு புதன் 6-ல் செல்வதால், வயிறு சம்பந்தமான பிரச்னை வரலாம். கவனம் தேவை.

5-ல் கேது இருப்பதால் குழந்தைகளின் நட்பு வட்டத்தைக் கவனிக்கவும். 6-ல் சுக்கிரன் இருப்பதால் கடன் வாங்க நேரிடும். உடன் வேலை செய்பவர்களால் அவ்வபோது பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். ஆனால் செப்டம்பர் 25-க்கு பிறகு சுக்கிரன் 7-ல் நகர்வதால் கணவன் - மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும்.

11-ல் ராகு திடீர் பணவரவு தருவார். தொழில் மற்றும் முதலீடுகளில் பெரிய லாபம் உண்டு. எளிதாக யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். ஏழரைச் சனியில் வக்கிரம் நடப்பதால் சொந்த ஊரை விட்டு தொலை தூரத்தில் தங்கி வேலை பார்க்கும் நிலை ஏற்படும். சிலருக்குத் தூக்கமின்மை கால் வலி வரலாம். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். எந்த ஒரு செயலிலும் தாமதமாக வெற்றி கிடைக்கும். சிலருக்கு மன அழுத்தம், தேவையற்ற பயம் தோன்றி மறையும்.

கலை, அரசியல் துறைகளில் இருப்பவர்கள் சாதிக்கும் யோகம் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையே சில நேரங்களில் கருத்து மோதல்கள் ஏற்படும். இந்த மாதம் மேஷ ராசிக்காரர்கள் நிதானத்தை கடைபிடித்து, தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி அடைவீர்கள். வணங்கவேண்டிய தெய்வம் - முருகப்பெருமான்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User