KKR vs LSG: `எனது குடும்பம் பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்தது, அதனால்.!' - முகுல் சௌத்ரி எமோஷனல்

Apr 10, 2026 - 11:01
 0
KKR vs LSG: `எனது குடும்பம் பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்தது, அதனால்.!' - முகுல் சௌத்ரி எமோஷனல்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ( ஏப்ரல். 09) ஆட்டத்தில் லக்னோ அணி, கொல்கத்தாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய முகுல் சௌத்ரி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

விருது வென்ற பிறகு பேசிய முகுல் செளத்ரி, " என்னுடைய இந்த கிரிக்கெட் பயணம் நான் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது.

முகுல் சௌத்ரி - ரிஷப் பண்ட்
முகுல் சௌத்ரி - ரிஷப் பண்ட்

எனது அப்பா தன் மகன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவை கொண்டிருந்தார்.

ஆனால் எங்கள் குடும்பம் பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்தது.

அதனால் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை அவ்வளவு எளிதாகத் தொடங்க முடியவில்லை.

நான் சுமார் 12-13 வயதில்தான் விளையாட ஆரம்பித்தேன். சீகரில் கிரிக்கெட் அகாடமிகள் அதிகம் இல்லை.

அதன் பிறகு ஒரு கிரிக்கெட் அகாடமியில் 5-6 ஆண்டுகள் பயிற்சி பெற்றேன்.

அதற்குப் பிறகு நான் ஜெய்ப்பூருக்கு வந்துவிட்டேன். கடந்த நான்கு ஆண்டுகளாக நான் ஜெய்ப்பூரில் பயிற்சி பெற்று வருகிறேன்.

டி20 கிரிக்கெட் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். அதனால் எனக்கு அனுபவம் தேவைப்பட்டது.

முகுல் சௌத்ரி
முகுல் சௌத்ரி

இதற்காக 3-4 மாதங்கள் குருகிராமில் தங்கி, டெல்லி போட்டிகளில் விளையாடினேன்.

அது கிரிக்கெட்டிற்கு என்னைத் தயார்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது.

கடவுள் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், எனவே எனது திறமை மீது நான் நம்பிக்கை வைக்கிறேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0