'Keep the body guessing': கோலியின் புறக்கணிப்புக்கு இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தாரா ஹெட்?
ஐபிஎல் 2026 தொடரில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, களத்தில் நடந்த மோதலைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி, ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் கை குலுக்க மறுத்த நிலையில், ஹெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது கோலியின் செயலுக்கு பதிலடியாக இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்த சர்ச்சை போட்டியின் நடுவே தொடங்கியது. ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட், விராட் கோலியை பெரிய ஷாட்களை அடிக்குமாறு சவால் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலளித்த கோலி, "இப்போது நீங்கள் மாற்று வீரராக வெளியேறப் போவதில்லை என்பதால், நீங்களே பந்து வீசலாம்," என்று கூறினார். இந்த வாக்குவாதத்திற்குப் பிறகு, கோலி 11 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஹைதராபாத் அணியின் புதுமுக வீரர் சகிப் ஹுசைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கோலி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியபோது, ஹெட் அவரைப் பார்த்து ஏளனமாக சில வார்த்தைகளைக் கூறியதாகத் தெரிகிறது. இந்த ஆட்டமிழப்பின் விரக்தி, போட்டிக்குப் பிறகான கை குலுக்கலின் போதும் தெளிவாக வெளிப்பட்டது.
போட்டி முடிந்ததும், வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்க வரிசையில் நின்றனர். அப்போது டிராவிஸ் ஹெட், கோலியை நோக்கி தனது கையை நீட்டினார். ஆனால், ஹெட்-ஐ புறக்கணித்த கோலி, அவரைப் பார்க்காமல் நேராக நடந்து சென்றார். இருப்பினும், அவர் மற்ற ஹைதராபாத் வீரர்களான பேட் கம்மின்ஸ் உள்ளிட்டோருடன் சகஜமாகக் கை குலுக்கினார். கோலியின் இந்த செயல், விளையாட்டு நெறிமுறைகள் குறித்த விவாதத்தை கிரிக்கெட் உலகில் கிளப்பியுள்ளது.
இந்தப் போட்டி மற்றும் கை குலுக்கல் சர்ச்சை முடிந்த சில மணி நேரங்களில், டிராவிஸ் ஹெட் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை வெளியிட்டார். அதில், "Keep the body guessing" ( யூகித்தில் வைத்துக்கொண்டே இரு) என்று குறிப்பிட்டிருந்தார். கோலியின் கை குலுக்கல் புறக்கணிப்புக்கு மறைமுகமாகப் பதில் கொடுக்கும் வகையிலேயே ஹெட் இந்தப் பதிவை வெளியிட்டிருப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)