கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

Jun 09, 2026 - 17:00
0
கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தான்; ஆனால், `அமைச்சர்' பதவிகளில் ஏகப்பட்ட பிரச்னை!

சில மாதங்களாக, கர்நாடகா முதலமைச்சர் பதவிக்கு குழப்பம் நீடித்து வந்தது. அது சரியாகவே, இப்போது அந்தக் குழப்பம் மடைமாறி கர்நாடகா அமைச்சர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

கடந்த ஜூன் 3-ம் தேதி, கர்நாடகா முதலமைச்சராக பொறுப்பேற்றார் டி.கே.சிவக்குமார். இவருடன் 13 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.

பதவியேற்ற இரண்டு நாள்களிலேயே (ஜூன் 5), தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராமலிங்க ரெட்டி. பெங்களூரு வளர்ச்சித் துறை தராமல் அவருக்கு பாசனத் துறை தந்தது தான் ராமலிங்க ரெட்டியின் அதிருப்தி.

பலகட்ட பேச்சுவார்த்தைகள், சமாதனங்களுக்குப் பிறகு, தன்னுடைய ராஜினாமாவை கடந்த 6-ம் தேதி, திரும்பப் பெற்றார் ராமலிங்க ரெட்டி.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

அடுத்ததாக, கிருஷ்ண பைரேகௌடா. இவருக்கு பெங்களூரு வளர்ச்சித் துறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை விட பெரிய துறை வேண்டும்... அதிகாரம் வேண்டும் என்று அமைச்சர் பதவியை ஏற்காமல் இருந்து வருகிறார்.

இவர் தனக்கு பவர்ஃபுல்லான அதிகாரம் வேண்டும் என்று காங்கிரஸ் டெல்லி தலைமை கதவுகளைத் தட்டி வருகிறார் கிருஷ்ண பைரேகௌடா.

கர்நாடகா காங்கிரஸின் சீனியர் தலைவர் கே.எச். முனியப்பா. இவருக்கு உணவு மற்றும் குடிமைப் பொருள்கள் துறை வழங்கப்பட்டது. அந்தத் துறை அவருக்குப் பிடிக்கவில்லை.

அதற்கு பதிலாக, சமூக நலத்துறை, விவசாயம் போன்ற வெயிட்டான துறைகளை எதிர்பார்க்கிறார்.

ஆக, கர்நாடகாவில் முதலமைச்சர் பிரச்னை தீர்ந்து அமைச்சர்கள் பிரச்னை தொடங்கியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User