கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு: ஆளுநரை நேரில் சந்தித்தது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பெண் ஐஏஎஸ் அதிகாரிக்குப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்த தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று நானும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், வழக்கறிஞர்களும் டிஜிபியைச் சந்தித்து புகார் அளித்திருந்தோம்.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த இந்த ஆறு மாதத்தில் நடக்கக்கூடிய அனைத்து குற்றசம்பவங்களிலும் குறிப்பாக பாலியல் குற்றச் சம்பவங்களில் ஆளுங்கட்சியனர்தான் ஈடுபடுகிறார்கள். எனவே குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் புகார் மனு அளித்திருக்கிறோம்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது புகார் அளித்த பின்பாவது இந்த முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுந்து உண்மையாக என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்டு குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்வார் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். மக்களும் அதனை எதிர்பார்த்தார்கள்.
ஆனால் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்த பின் நான் கொடுத்த பேட்டியை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் தூங்கிக்கொண்டிருக்கும் முதலமைச்சர் இதில் இருந்து எழுந்திரிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த டம்மி முதல்வர் இன்னும் திருந்தவேயில்லை.

இன்னும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் நிற்காமல் குற்றவாளிகள் பக்கத்தில் சொகுசாகப் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார். இந்தக் குற்றத்தை 116 நாட்களாக அமைச்சர்களும், முதல்வரும் மறைத்திருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை கிடையாது. இதனை விரைவாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)