Kaattaan:"மதுரை லுக்தான் எனக்கானது போலனு நான் நினைக்கிறேன்!" - விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பார்வதி!

Mar 26, 2026 - 12:01
 0
Kaattaan:"மதுரை லுக்தான் எனக்கானது போலனு நான் நினைக்கிறேன்!" - விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பார்வதி!

'காக்கா முட்டை' மணிகண்டனின் அடுத்த படைப்பான 'காட்டான்' வெப் சீரிஸ் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

'கடைசி விவசாயி' படத்தை தொடர்ந்து மணிகண்டன் டைரக்ட் செய்திருக்கும் இதிலும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Kaatan Web Series
Kaatan Web Series

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. படகுழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.

பார்வதி, "இந்த தருணத்திற்கு ரொம்ப நாட்களாக காத்திருந்தேன்னு சொல்லலாம். நான் ஆங்கரிங் பண்ணீட்டு இருந்த சமயத்துல இந்த மாதிரி 'காக்கா முட்டை' மணிகண்டன் சார் ஒரு வெப் சீரிஸ் எடுக்கிறாரு.

அதுல நீங்க நடிக்கணும்னு கேட்டாங்க. எனக்கு நம்ப முடியல, பிறகு தெளிவாக அவங்ககிட்ட பேசிட்டு மணிகண்டன் சார்கூட ஒரு இ -மீட்டிங்ல கலந்துக்கிட்டேன். பிறகு லுக் டெஸ்டுக்காக உசிலம்பட்டிக்கு போனேன்.

நான் அங்க நல்ல மார்டனாக கிளம்பி போயிருந்தேன். டிசைனர் இருப்பாங்க, நீங்க போய் கேரக்டராக மாறி வாங்கனு அனுப்பினாங்க.

Vj Parvathy
Vj Parvathy

படத்துல என்னுடைய லலிதா கேரக்டரை பார்க்கும்போது, நானா இதுங்கிற மாதிரி எனக்கு ஆச்சரியமாக தெரிஞ்சது. நான் மதுரை பொண்ணுதான். கொஞ்சம் மார்டனாக டிரெஸ் தேடிப் போவேன்.

இந்த வெப் சீரிஸ்ல மேக் அப் இல்லாமல் எனக்கான லுக் எடுத்துட்டு வந்தாங்க. அந்த ஊர் லுக்தான் எனக்கானது போலனு நான் நினைக்கிறேன்.

மணிகண்டன் சார்கூட ஷூட்டிங்ல சினிமா, அரசியல், இலக்கியம்னு நிறைய விஷயங்கள் பேசுவேன். அவர் பார்வையிலிருந்து அவர் சொல்கிற விஷயங்கள் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும்." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0