Jailer 2: 'திரையிடப்பட்ட ரஜினி மேஷ் அப்; கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!- மன்னிப்புக் கேட்ட திரையரங்கம்!

Oct 20, 2026 - 12:30
0
Jailer 2: 'திரையிடப்பட்ட ரஜினி மேஷ் அப்; கொந்தளித்த விஜய் ரசிகர்கள்!- மன்னிப்புக் கேட்ட திரையரங்கம்!

சென்னை அம்பத்தூரில் முருகன் திரையரங்கில் ஜெயிலர் 2 படத்துக்கு இடையில் ரஜினி ரசிகர்களை குஶுப்படுத்த திரையிடப்பட்ட மேஷ் அப் வீடியோ விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது. சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் திரையரங்குக்கு எதிராக வசைகளை பொழிய திரையரங்கு நிர்வாகம் இப்போது மன்னிப்பு கேட்டிருக்கிறது.

திரையிடப்பட்ட மேஷ் அப்
திரையிடப்பட்ட மேஷ் அப்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெளியானது. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அந்த நடிகர்களின் ரசிகர்களை குஷிப்படுத்தும்படி மேஷ் அப்களை திரையிடுவது வழக்கம். அந்தவிதத்தில் அம்பத்தூரில் உள்ள முருகன் திரையரங்கில் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும்படிக்கு ஒரு மேஷ் அப் திரையிடப்பட்டிருக்கிறது.

அதில், முன்பொரு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யும் அவரின் தந்தை எஸ்.ஏ.சியும் ரஜினியின் காலில் விழுந்து வணங்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. அது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துவிட்டது. முதல்வரை இப்படி தரக்குறைவாக சித்தரித்து திரையரங்கில் திரையிடலாமா என உஷ்ணமாகிவிட்டனர். திரையரங்கை டேக் செய்தும் வசை மொழிகளை பொழிந்தனர். உச்சக்கட்டமாக அமைச்சர் ராஜ்மோகன், சி.டி.ஆர்.நிர்மல்குமாரை டேக் செய்து திரையரங்கு மீது நடவடிக்கை எடுக்குமாறும் நூற்றுக்கணக்கான ட்வீட்களை இறக்கினர்.

CM Vijay
CM Vijay

பதறிப்போன திரையரங்க நிர்வாகம், 'தவறான மேஷ் அப் வீடியோவை திரையிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதை வேண்டுமென்று செய்யவில்லை. அந்த மேஷ் அப்பால் மனம் புண்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். அந்த மேஷ் அப்பை திரையிடுவதை நிறுத்திவிட்டோம்' எனக் கூறியிருக்கின்ற னர். 'எங்களை பகைச்சுக்கிட்டு எங்களோட NOC இல்லாம ஊருக்குள்ள தொழில் நடத்த முடியுமா?' என விர்ச்சுவல் வாரியர்ஸ் பெருமிதமாக ட்வீட் செய்து வருகின்றனர். உணர்ச்சிவசத்தை கொஞ்சம் அடக்குங்க பாஸ்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User