IPL 2026: ''அப்ப கிளவுசில பசை தடவிட்டு ஆடுங்க..." - சாய் சுதர்சனின் Hit Wicket-ஐ விமர்சித்த சேவாக்

May 31, 2026 - 13:02
0
IPL 2026: ''அப்ப கிளவுசில பசை தடவிட்டு ஆடுங்க..." - சாய் சுதர்சனின் Hit Wicket-ஐ விமர்சித்த சேவாக்

2026 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

அந்த அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் இந்தச் சீசனில் அபாரமாக விளையாடி ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

சாய் சுதர்சன் ஹிட்விக்கெட்
சாய் சுதர்சன் ஹிட்விக்கெட்

ஆனால் அவர் ஹிட் விக்கெட்டில் ஆட்டத்தை இழப்பது விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போதும், பெங்களூரு அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியின் போதும், அவர் 'ஹிட் விக்கெட்' முறையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக், சாய் சுதர்சனை விமர்சித்திருக்கிறார்.

"சாய் சுதர்சனுக்கு இனி 'ஸ்டிராடஜிக் டைம்-அவுட்' நேரத்தின் போது பேட்டில் தடவ பசை கொண்டு வர வேண்டும்.

கையுறையில் பசையைத் தடவிக்கொண்டால் பேட் அவரது கையை விட்டு நழுவாது. ஒரே தவறை எப்படித் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் செய்ய முடியும்?

சாய் சுதர்சன் ஹிட்விக்கெட்
சாய் சுதர்சன் ஹிட்விக்கெட்

ஒரு வீரர் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் இவர் கற்கவில்லை.

எனது நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட நான் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்ததில்லை" என்று விமர்சித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User