IND vs NZ: "நான் மிட்செல்லிடம் சென்று மன்னிப்பு கேட்டேன், ஏனென்றால்.!"- அர்ஷ்தீப் சிங்

Mar 9, 2026 - 00:32
 0
IND vs NZ: "நான் மிட்செல்லிடம் சென்று மன்னிப்பு கேட்டேன், ஏனென்றால்.!"- அர்ஷ்தீப் சிங்

டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு அர்ஷ்தீப் சிங் மைதானத்தில் நடந்த விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

" நான் மிட்செல்லிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். நான் வீசிய பந்து கொஞ்சம் அதிகமாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகி, அவரை தாக்கியது. அதை வேண்டுமென்றே செய்யவில்லை என அவரிடம் சொன்னேன்.

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

இந்த தருணத்தில் மகிழ்வாக இருக்கிறது. ஆனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தான் இந்த மகிழ்ச்சியை முழுமையாக உணர முடியுமென நினைக்கிறேன்.

இந்த அணி ஒரு அருமையான அணி. எங்கள் அணியில் எல்லா இடத்திலும் மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். அதனால் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் நன்றாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

பந்துவீச்சாளர்களின் வேலை என்னவென்றால், பேட்ஸ்மேன்கள் 250 ரன்கள் அடிக்க முயன்றால், அவர்களை 250க்கு கீழே தடுக்க வேண்டும். அதுதான் எங்கள் நோக்கம்.

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

ரீல்ஸ் பற்றி கேட்டால், இப்போது மேலே போய் என் போனை எடுத்துக் கொண்டு வருகிறேன். ஏற்கனவே 10 அல்லது 15 ரீல்ஸ் செய்ய வேண்டுமென யோசித்து வைத்திருக்கிறேன். எத்தனை செய்ய முடிகிறதென்று பார்ப்போம். ஆனால் இது ஒரு அருமையான அனுபவம். நான் இதை மிகவும் ரசிக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0