'நான் விக்கெட் எடுக்கலன்னாஹேசல்வுட் எடுப்பார்... அவர் எடுக்கலன்னா...' - ரகசியம் கூறும் RCB பௌலர்கள்

Jun 01, 2026 - 01:31
0
'நான் விக்கெட் எடுக்கலன்னாஹேசல்வுட் எடுப்பார்... அவர் எடுக்கலன்னா...' - ரகசியம் கூறும் RCB பௌலர்கள்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.

கோலி
கோலி

ஆர்.சி.பியின் வெற்றிக்கு உதவிய சீனியர் பௌலர்களான புவனேஷ்வரும் ஹேசல்வுட்டும் போட்டிக்கு பிறகு மகிழ்ச்சியாக பேசியிருந்தனர். புவனேஷ்வர் பேசுகையில், 'தனிப்பட்ட ரெக்கார்டை விட கோப்பைகள்தான் முக்கியம். எனக்கும் இது நல்ல சீசனாகவே அமைந்தது. இந்த மாதிரியான பெரிய போட்டிகளுக்கு முன்பாக நன்றாக ஆடிவிட்டு வருவது முக்கியம்.

நான் நன்றாக வீசவில்லையெனில் ஹேசல்வுட் நன்றாக பந்துவீசுவார். அவரால் முடியவில்லையெனில் நான் முடிப்பேன். எங்களால் முடியவில்லையெனில் ராஷிக் தர் நன்றாக வீசி கொடுப்பார். இது ஒரு கூட்டு முயற்சி' என்றார்.

RCB
RCB

ஹேசல்வுட் பேசுகையில், 'நாங்கள் இந்த சீசனில் கொஞ்சம் இலகுவான அழுத்தமற்ற மனநிலையிலேயே இருந்தோம். நிறைய திறமையான வீரர்களை கொண்டிருந்தோம். எந்த சூழலிலும் எந்த வீரராலும் போட்டியை வென்று கொடுக்க முடியும் என்ற நிலையே இருந்தது' என்றார்

கோலி
கோலி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User