'I will Rethink about it..!' - பிரேமலதாவின் `ராஜகுரு' பேச்சுக்கு விஜய் சொன்ன பதில்!

May 13, 2026 - 13:01
0
'I will Rethink about it..!' - பிரேமலதாவின் `ராஜகுரு' பேச்சுக்கு  விஜய் சொன்ன பதில்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அரசியல் செயலாளர் என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி தொடர்பாளரும், விஜயின் ஆஸ்தான ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அறிவித்திருந்தார்.  

இதை இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்திருந்தார். ``அவர் உங்களுக்கு ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட ஆலோசகராக நியமித்திருக்கலாம். இதற்கும் விஜய் பதில் சொல்வார் என நினைக்கிறேன்" என கூறி இருந்தார்.

இந்த விமர்சனத்திற்கு 'I will rethink about it' என்று தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் போது விஜய் பதிலளித்தார்.

பிரேமலதா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் 'குதிரைப்பேரம்' விமர்சனத்திற்கு, 'எங்கள் அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே தவிர, குதிரைப் பேரத்தில் ஈடுபடாது' என்று கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User