'விஜய்யைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன்..!'- பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்க வைரமுத்து கோரிக்கை

Jun 30, 2026 - 15:01
0
'விஜய்யைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன்..!'- பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்க வைரமுத்து கோரிக்கை

இயக்குநர் இமயம் பாரதிராஜா ஜூன் 10-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

அவர் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் சமாதிக்குச் சென்றிருக்கும் கவிஞர் வைரமுத்து, தமிழக அரசு பாரதிராஜவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

பாரதிராஜா
பாரதிராஜா

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இமயத்தைப் புதைத்த இடம் இதுதான். தூங்கு ராஜா தூங்கு, ஓடி ஓடிக் களைத்தவனே கலையாத உறக்கத்தில்...கனவுகளற்ற உறக்கத்தில் ஓய்வுகொள்.

மண்ணை இழுத்துப் போர்த்துப்படுத்திருக்கும் உன்னை குளிரோ மழையோ வெயிலோ புயலோ ஒன்றும் செய்யாது.

நலம் கேட்க வந்த நான் நல்லசெய்தி கொண்டுவரவில்லை. இதே இடத்தில் என்னோடு நின்று இறுதி மரியாதை செலுத்திய உன் சீடன் உனைத்தேடி வந்துவிட்டான்.

ஜோடிக் குதிரைகளை இழந்து கவிழ்ந்து கிடக்கிறது கலைத்தேர். கடமை இருக்கிறது. இந்த மண்ணகத்தில் உனக்கொரு மணிமண்டபம்; அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.

வைரமுத்து
வைரமுத்து

முதலமைச்சர் விஜயைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன். இந்த இடம் கலைக்கோயிலாக என்று கட்டப்படுமோ அன்று தேனி மாவட்டம் முழுக்க தேவர்கள் பூச்சொரிவர்" என்று பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User