"கடும் குளிரான நீரில் 30 முதல் 40 நொடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன்" - பகிரும் ஆர்யா

Apr 14, 2026 - 13:01
 0
"கடும் குளிரான நீரில் 30 முதல் 40 நொடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன்" - பகிரும் ஆர்யா

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மிஸ்டர் எக்ஸ்' (Mr X) திரைப்படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு பரோமோஷனில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சவாலான தண்ணீருக்கு அடியிலான (Underwater) சண்டைக்காட்சிகள் குறித்து ஆர்யா பகிர்ந்திருக்கிறார்.

Arya - Mr X
Arya - Mr X

இது குறித்து ஆர்யா, "கடலின் ஆழமான பகுதியைத் தத்ரூபமாகக் காட்டுவதற்காக, மும்பையில் உள்ள ஒரு டைவிங் நீச்சல் குளத்தில் சுமார் 20 அடி ஆழத்தில் இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

பொதுவாக 6 அடி ஆழத்திலேயே இத்தகைய காட்சிகள் எடுக்கப்படும் நிலையில், இந்தப் படத்திற்காக 20 அடி ஆழம் வரை செல்ல வேண்டியிருந்தது.

சுமார் 15 முதல் 16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த கடும் குளிரான நீரில் சட்டை இல்லாமல் நடிக்க வேண்டியிருந்தது.

அத்தகைய குளிரில் உடல் நடுங்குவது இயல்புதான். ஆனால் காட்சியில் உடல் நடுக்கம் தெரியக்கூடாது என்பதால் சுமார் 30 முதல் 40 விநாடிகள் வரை மூச்சை அடக்கி நடித்தேன். இது எனக்குப் பெரும் சவாலாக இருந்தது.

நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக, ஒருமுறை தண்ணீருக்கு அடியில் சென்றால் கேமரா குழுவினருடன் சேர்ந்து சுமார் ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. அதன் பின்னரே நாங்கள் மேலே வருவோம்.

Arya - Mr X - Underwater Scene
Arya - Mr X - Underwater Scene

நீருக்கடியில் இருந்த ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன்கள் மூலம் இயக்குநர் மனு ஆனந்த் வழங்கிய அறிவுறுத்தல்களைக் கேட்டு நடித்தேன்.

இவ்வளவு சிரமங்களுக்குப் பிறகு திரையில் அந்த அவுட்புட் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. மக்கள் திரையில் பார்க்கும்போது இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0