"நான் யாருடைய நிழலிலும் இருக்க விரும்பவில்லை"- கேப்டன் பொறுப்பு குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

Jun 08, 2026 - 11:01
0
"நான் யாருடைய நிழலிலும் இருக்க விரும்பவில்லை"- கேப்டன் பொறுப்பு குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களில் இந்திய அணியை வழிநடத்த இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தனது புதிய பொறுப்பு குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், "நான் என்னுடைய தனித்துவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

நான் இதற்கு முன்பு எப்படி இருந்தேனோ, அதே நபராகத்தான் இப்போதும் இருக்க வேண்டும். வேறொருவரைப் போல மாறவோ அல்லது யாருடைய நிழலிலும் இருக்கவோ நான் விரும்பவில்லை.

நான் வளரும்போதே சவால்களை எதிர்கொள்வதை விரும்பினேன். குறிப்பாக மும்பையில் இருந்து வந்ததால் சவால்களை எதிர்கொள்வது எனக்குப் பழகிவிட்டது. அங்கு கிரிக்கெட் என்பது மிகப்பெரிய விஷயம். போட்டி கடுமையாக இருக்கும். அங்கு தெருவில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் மும்பை அணிக்காக விளையாட வேண்டும் என்றுதான் ஆசைப்படும்.

ஸ்ரேயஸ் ஐயர்
ஸ்ரேயஸ் ஐயர்

அதனால் எனது மனநிலை எப்போதும் சவால்களை வெல்வதைப் பற்றியதாகவே இருந்தது. தற்போது எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு கிடைத்திருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய சவால். அதை சரியாக செய்ய வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User