ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் - எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

Jun 13, 2026 - 13:01
0
ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் - எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை ஒன்று செயல்படுதையும், அதனால் மக்கள் பேருந்திற்கு மிகுந்த அச்சத்துடன் அமர்வதற்கு இடமின்றி நிறுத்ததிலிருந்து சற்று தொலைவில் கால்கடுக்க நின்று பேருந்து ஏறுவதையும், இரவு நேரங்களில் அச்சத்துடன் பேருந்திற்கும் காத்திருக்கும் பணி செய்யும்பெண்களின் நிலையையும், குடிக்காரர்களில் அடிதடி, விபத்துகளைப் பற்றியெல்லாம் கடந்த 11.06.2026 அன்று "ஓபன் பார்க்காக மாறிய பஸ் ஸ்டாப்; அச்சத்தில் மக்கள்... நடவடிக்கை எடுக்குமா அரசு?! என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.

அச்செய்தியின் எதிரொலியாக நேற்று அப்பகுதியில் விளக்கின்றி இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு ஒளிரும் மின்விளக்கு, முழு நேர போலீஸ் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பஸ் ஸ்டாப் - முன்பு

இதைத்தபார்த்த அப்பகுதி மக்கள் மீண்டும் நம்மிடையே பேசியபோது, "இவ்ளோ நாளா இந்த பஸ் ஸ்டாப்ல பயந்து பயந்து பஸ் ஏற நின்னுட்டு இருந்தோம். இன்னைக்கி தான் எந்த பயமும் இல்லாமா நின்னு பஸ் ஏறினோம்.

பஸ் ஸ்டாப் தற்போது

இங்க நின்னு பஸ் ஏறவே பயமா இருந்த எங்களுகெலான் இப்ப தான் நிம்மதியாவும் போலீஸ் இருக்காங்கன்னு தைரியமாவும் இருக்கு. போலீஸ் இருக்குறதுனாலே இன்னைக்கி குடிக்க வரவங்களான் எந்த பிரச்சனையும் பண்ணல.

அப்படியே பண்ணாலும் போலீஸ் பாத்துப்பாங்கன்னு பயமில்லாம இருக்கோம். இப்ப அவங்க பாட்டுக்கு வராங்க வாங்குறாங்க குடிச்சிட்டு போறாங்க. அப்படியே எதாவது பிரச்சனை பண்ணாலும் போலீஸ் அவங்கள பாத்து பேசி சரி பண்ணிடுறாங்க. இப்பதான் இந்த இடத்துலையும் எந்த பிரச்சனையும் இல்ல.

இத்தன வருசத்துல எப்பையுமே இந்த இடம் இப்படி இருந்து பாத்தது இல்ல. இன்னைக்கி போலீஸ் வந்து நிக்கிறது, பேனர் வச்சது எல்லாமே எங்களுக்கு ரொம்பவே புதுசாவும் ஆச்சிரியமாவும் இருந்துச்சி. இன்னைக்கிதான் முதன் முறையா அந்த பஸ் ஸ்டாப்ல ஆளு யாரும் குடிக்காம இருக்கறதையே பாத்தோம்.

பயமில்லாmaம

பஸ்ஸும் ஏறுனோம். எங்களுக்காக செய்தி வெளியிட்ட விகடனுக்கும், நடவடிக்கை எடுத்த அரசுக்கும் ரொம்ப நன்றி.

ஆனா,எங்களுக்கு இது எங்களுக்கான கண்துடைப்புக்கான தீர்வாதான் இருக்கு

. இந்த ஒயின் ஷாப்ப வேற எடத்துக்கு சீக்கிரம் மாத்தி, அந்த பஸ்ஸ்டாப்பையும் சரிப் பண்ணி முக்கியமா கேமரா வசதியோட அங்கையே வையிட் பண்ணி பஸ் ஏறுற மாதிரி செஞ்சிக்கொடுக்கனும் . இதுதான் எங்களுக்கான நிரந்தர தீர்வாஇருக்கும்.

இதையெல்லான் செஞ்சிக்கொடுக்கிற வரையும் எங்களுக்கு இந்த போலீஸ் பாதுகாப்பு மட்டும் இப்டியேதொடர்ந்து கொடுங்க. சும்மா செய்தி வந்துச்சி வந்தோன்னு ஒரு நாள் மட்டும் பாதுகாப்பு கொடுக்காதீங்க தொடர்ந்து கொடுங்க" என்றனர்.

மக்களின் நீண்டநாள் பிரச்சைக்கு தற்காலிக தீர்வுதான் தற்பொழுது கிடைத்துள்ளது. அரசு விரைந்து துறைச்சாரந்த நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தர தீர்வாக மதுபானக்கடையை வேறு இடத்திற்கு மாற்றி, பேருந்து நிறுத்தத்தை முழுமையாக மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User