"நானும் தடுமாறினேன்; ஆனா உங்க அன்பால விழவே விடாம தாங்கிப் பிடிச்சிருக்கீங்க" - ரவி மோகன் எமோஷனல்!

Jul 04, 2026 - 00:00
0
"நானும் தடுமாறினேன்; ஆனா உங்க அன்பால விழவே விடாம தாங்கிப் பிடிச்சிருக்கீங்க" - ரவி மோகன் எமோஷனல்!

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025 மேடையில் நடிகர் ரவி மோகனின் ஷேரிங்க்ஸ்...

"2015-ல ‘தனி ஒருவன்’ ரிலீஸானப்போ எனக்கு எல்லா அவார்டுமே கிடைச்சுது. விகடன் அவார்டும் கிடைச்சுது. ஆனா அவங்க ஒரு நல்ல மனசோட, ‘தனி ஒருவனுக்காக உனக்கு இந்த அவார்டு கிடைக்கலை, `பூலோகம்’ படத்துக்காகத்தான் கொடுக்கிறோம்’னு சொன்னாங்க.

அதுக்கு ஒரு தனி தைரியமும் பக்குவமும் வேணும். ஏன்னா `தனி ஒருவன்’ல நல்லா நடிச்சிருக்கீங்கன்னு மத்தவங்க சொன்னப்போ, ‘பூலோகத்துல அந்த கதாபாத்திரமாவே வாழ்ந்துருக்கடா’ன்னு விகடன் மென்ஷன் பண்ணிக் குடுத்தாங்க. அதனால விகடன் எப்பவுமே எனக்கு ஸ்பெஷல்.

ரவி மோகன்
ரவி மோகன்

எல்லார் வாழ்க்கையிலயும் ஒரு ஸ்டேஜ் வரும், ஒரு தடுமாற்றம் வரும். தட்டிக்கொடுத்துட்டுப் போயிடுவாங்க. நானும் தடுமாறினேன். ஆனா உங்க அன்பால என்னை விழவே விடாம தாங்கிப் பிடிச்சிருக்கீங்க. ரொம்ப நன்றி.

உங்களுக்காக என்ன வேணா பண்ணுவேன். சினிமாவுல நடிக்க மாட்டேன்னு நான் சொன்னது ஒரு பெரிய தப்பு, அதைச் சுட்டிக்காட்டி ‘நீ வரணும், நடிக்கணும்’னு சொல்லி கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க. இனிமே எனக்கு இந்த Sympathy வேணாம்... உங்க Empathy இருந்தா மட்டும் போதும்.’’

ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025
ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User