திருச்சி: 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை! - நீதிமன்றம் அதிரடி
திருச்சி, பாலக்கரை அருகே உள்ள தர்மநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் சூசைநாதன் (வயது: 56). இவர், ஜீயபுரம் அருகே உள்ள போதாவூர் அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவரது வகுப்பில் படித்த 7 வயது மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, மாணவியின் பெற்றோர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து, ஜீயபுரம் காவல் நிலைய போலீஸார், ஜெயராஜ் சூசைநாதனை கைது செய்தனர்.

அதோடு, அவர்மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், ஜெயராஜ் சூசைநாதனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார். 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)